IPL 2022 | கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய ஹர்திக் பாண்ட்யா - ஹைதராபாத் அணிக்கு 163 ரன்கள் இலக்கு

1 month_ago 9
ARTICLE AD BOX

செய்திப்பிரிவு

Last Updated : 11 Apr, 2022 09:30 PM

Published : 11 Apr 2022 09:30 PM
Last Updated : 11 Apr 2022 09:30 PM

<?php // } ?>

மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 163 ரன்களை சேர்த்தது. அந்த அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 50 ரன்களை குவித்தார்.

15-வது ஐபிஎல் சீசன் ஆட்டத்தின் இன்றைய 21வது லீக் போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தின் கேப்டன் கேன் வில்லியம்ஸன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணிக்கு மேத்யூ வேட், சுப்மன் கில் இணை தொடக்கம் கொடுத்தது. இந்த இணையை நீடிக்க விடாமல், 2வது ஓவரிலேயே புவேனஸ்குமார் பிரித்து அனுப்பினார். அவர் வீசிய பந்தில் 7 ரன்களை எடுத்திருந்த சுப்மன் கில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்தாக களத்துக்கு வந்த சாய் சுதர்சன், மேத்யூ வேட் உடன் கைகோத்தார்.

அவரை 11 ரன்களில் தமிழக வீரர் நடராஜன் அவுட்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பினார். அடுத்து சில மேத்யூ வேட் 19 ரன்களில் வெளியேற, 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 80 ரன்களை சேர்த்திருந்தது. அடுத்து வந்த டேவிட் மில்லரும் பெரிய அளவில் ரன்களை சேர்க்காமல் 12 ரன்களிலேயே வெளியேறினார்.

அபிநவ் மனோஹர், ஹர்திக் பாண்ட்யா இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த, அபினவ் மனோஹரை புவனேஷ்குமார் வெளியேற்றினார். 21 பந்துகளை எதிர்கொண்டவர், 35 ரன்களை எடுத்து நடையை கட்டினார். மறுபுறம் ஹர்திக் பாண்ட்யா நிலைத்து நின்று ஆடி அணி நம்பிக்கையூட்டினார். கடைசி ஓவரில் மட்டும் 2 விக்கெட்டுகளை அந்த அணி தடுமாறியது. 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 162 ரன்களை குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில், புவனேஷ்குமார், நடராஜன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன், உமரான் மாலிக் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா 50 ரன்களைச் சேர்த்தார்.

<?php // } ?>

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

read-entire-article