LATEST ARTICLES

கரோனா கட்டுப்பாடுகளால் கொந்தளிப்பு: ஜின்பிங்குக்கு எதிரான போராட்டக் களத்தில் மாணவர்கள் தீவிரம்

0

ஷாங்காய்: தீவிர கரோனா கட்டுப்பாடுகள் விவகாரத்தில், சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், அதிபருக்கும் எதிரான பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. சீனாவில் கரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. கரோனா தொற்றை முழுமையாக இல்லாமல் செய்யும் நோக்கில் 'ஜீரோ கரோனா' எனும் கொள்கையை கம்யூனிஸ்ட் அரசு அமல்படுத்தி வருகிறது. இதனால், வீடுகளை விட்டு வெளியே செல்வதில் கட்டுப்பாடு, பணி இடங்களில் கட்டுப்பாடு, பொருட்களை வாங்குவதில் கட்டுப்பாடு என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நீண்ட நெடுங்காலமாக அமல்படுத்தப்பட்டு வரும் இந்தக் கட்டுப்பாடுகளால் சீன மக்கள் கோபம்...

நிறைவடைகிறது அஜித்தின் ‘துணிவு’ படப்பிடிப்பு: ஜன.11-ல் வெளியீடு?

0

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவடையும் எனவும், படம் வரும் ஜனவரி 11-ம் தேதி வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படங்களுக்குப் பிறகு நடிகர் அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணி தற்போது ‘துணிவு’ படத்திற்காக மூன்றாவது முறையாக ஒன்று சேர்ந்துள்ளது. மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்...

108 வைணவ திவ்ய தேச உலா – 73 | துவாரகா துவாரகாதீசர் கோயில் 

0

108 வைணவ திவ்ய தேசங்களில், குஜராத் மாநிலம் துவாரகை மாவட்டத்தில் உள்ள துவாரகாதீசர் கோயில் 73-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. கருப்புநிறம் கொண்ட கிருஷ்ணர் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. ஒகா துறைமுகத்துக்கு அருகில் கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகியோரால் 13 பாசுரங்களைக் கொண்டு மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. பெரியாழ்வார் பாசுரம்: பொல்லா வடிவுடைப் பேய்ச்சி துஞ்ச புணர் முலை வாய் மடுக்க ...

பிரபாஸ் ஜோடியாகிறார் ரித்தி குமார்

0

பிரபாஸ், இப்போது ‘புராஜக்ட் கே’, ‘சலார்’ படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்கும் ‘ராஜா டீலக்ஸ்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு 3 நாயகிகள். மாளவிகா மோகனன், நிதி அகர்வால் ஆகியோர் நடிக்க இருக்கும் நிலையில், இப்போது ரித்தி குமாரும் இணைந்துள்ளார். ரித்தி குமார், பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் தாரா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

108 வைணவ திவ்ய தேச உலா – 74 | அகோபிலம் பிரகலாத வரதன் கோயில் 

0

108 வைணவ திவ்ய தேசங்களில் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் உள்ள அஹோபிலம் பிரகலாத வரதன் கோயில், 74-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட ‘உக்கிர ஸ்தம்பம்’ உள்ளது. அகோ என்றால் சிங்கம். பிலம் என்றால் குகை. சிங்க வேல் குன்றம். நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாகக் கருதப்படும் இத்தலம் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது. மென்ற பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய், அவுணன் பொன்ற அகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதனிடம் நின்ற...

கணவரைக் கொன்று 10 துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்திய மனைவி, உதவிய மகன் கைது: டெல்லியில் இன்னொரு பயங்கரம்

0

புதுடெல்லி: டெல்லியில் கணவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஃப்ரிட்ஜில் வைத்து அப்புறப்படுத்திய மனைவியும், அதற்கு உடந்தையாக இருந்த மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் டெல்லியில் ஷ்ரத்தா எனும் இளம்பெண்ணை அவருடன் சேர்ந்து வாழ்ந்துவந்த அஃப்தாப் என்ற இளைஞர் கொலை செய்து பின்னர் உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி அதனை ஃப்ரிட்ஜில் தேக்கிவைத்து அவ்வப்போது அவற்றை நாய்களுக்கு வீசியெறிந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியே விலகாத நிலையில், அதே பாணியில் கொலை செய்து உடலை வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து...

மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோத்த தனுஷ் – புதிய பட பணிகள் பூஜையுடன் தொடக்கம்

0

தெலுங்கு இயக்குநருடன் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் விரைவில் ‘வாத்தி’ படம் திரைக்கு வர உள்ளது. பைலிங்குவலாக உருவாகும் இப்படம் தெலுங்கில் ‘சார்’ என தலைப்பில் வெளியாகிறது. இதையடுத்து அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் தனுஷ் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து மீண்டும் தெலுங்கு இயக்குநருடன் கைகோத்துள்ளார் தனுஷ். கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ (Fidaa), 2021-ம் ஆண்டு வெளியான...

ராகிங்கில் இருந்து தப்பிக்க 2-வது மாடியில் இருந்து குதித்த மாணவர் படுகாயம்: அசாமில் 5 பேர் கைது

0

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் திப்ருகர் பல்கலைக்கழகத்தில் ராகிங் காரணமாக மாணவர் ஒருவர் இரண்டாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், இச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மாநிலம் திப்ருகர் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பிரிவு மாணவர் ஆனந்த் சர்மா. இவரை மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் அவர் படுகாயமடைந்தார். ஆனந்த் சர்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், முன்னாள் மாணவர் ஒருவர், இந்நாள்...

‘பாபா’ மறுவெளியீட்டுக்காக டப்பிங் பணியில் ரஜினி – வைரல் புகைப்படங்கள்

0

‘பாபா’ திரைப்படத்தின் மறுவெளியீட்டுக்கான பணிகள் வேகமெடுத்துள்ள நிலையில், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள காட்சிகளுக்கு மட்டும் ரஜினிகாந்த் டப்பிங் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா,...

ஏழுமலையானை தரிசனம் செய்ய 48 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்

0

திருமலை: திருப்பதியில் பிரம்மோற்சவம் நடந்து முடிந்த நிலையில், தற்போது புரட்டாசி மாத கூட்டம் அலைமோதுகிறது. அதிலும் இன்று, 3வது சனிக்கிழமை என்பதால், ஏழுமலையானை தர்ம தரிசன வழியாக சென்று தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர். பிரம்மோற்சவம் நிறைவடைந்த பிறகும் வைகுண்டம் காம்ப்ளக்ஸில் பக்தர்கள் நிறைந்தனர். இதனால் வியாழனன்று 30 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்தியது. இந்நிலையில், இன்று 3வது புரட்டாசி சனிக்கிழமை என்பதால், பக்தர்களின் கூட்டம் அதிகமானது. இதனால், நேற்று மாலை நிலவரப்படி 48...