8 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியா - 'அடடே சுந்தரா' டீசர், ரிலீஸ் தேதி அறிவிப்பு

3 week_ago 9
ARTICLE AD BOX

செய்திப்பிரிவு

Last Updated : 18 Apr, 2022 05:13 PM

Published : 18 Apr 2022 05:13 PM
Last Updated : 18 Apr 2022 05:13 PM

<?php // } ?>

நஸ்ரியா - நானி நடிக்கும் 'அடடே சுந்தரா' படத்தின் டீசர் தேதி மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தமிழில் வெளியான 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்தில் நடித்து முடித்த கையோடு, ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா நடிப்புக்கு தற்காலிக முழுக்கு போட்டியிருந்தார். அவ்வப்போது மலையாள படங்களில் முகம் காட்டி வந்தவர், தற்போது விவேக் ஆத்ரேயா இயக்கும் 'அடடே சுந்தரா' படத்தில் நடித்துள்ளார்.

நானி நாயகனாக நடிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. கிட்டதட்ட 8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியாவைக் காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

'அடடே சுந்தரா' திரைப்படம் காதல் மற்றும் நகைச்சுவை பாணியிலான கதைக்களத்தை உள்ளடக்கியது. சிறந்த நகைச்சுவைத் திரைப்படமாக இந்தப் படம் அமையும் என நானி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தெலுங்கில் 'அண்டி சுந்தரானிகி' என்றும், 'ஆஹா சுந்தரா' என மலையாளத்திலும் படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 'அடடே சுந்தரா' படத்தின் டீசர் நாளை மறுநாள் ஏப்ரல் 20-ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம், வரும் ஜூன் மாதம் 10-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

<?php // } ?>

தவறவிடாதீர்!

read-entire-article