5ஜி அலைக்கற்றை ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும்: தொலைத்தொடர்பு அமைச்சர் உறுதி

1 month_ago 10
ARTICLE AD BOX
<?php // } ?>

புதுடெல்லி: 5-ஜி அலைக்கற்றை ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.

சைபர் குற்ற விசாரணை மற்றும் டிஜிட்டல் போரன்சிக் குறித்த 2-வது தேசிய மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தகவலைத் தெரிவித்தார்.

5-ஜி அலைக்கற்றைக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டண விவரம் மிக அதிகம் என்று இத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி, நாடாளுமன்ற நிலைக்குழுவும் கருத்து தெரிவித்துள்ளது. சசி தரூர் தலைமையிலான அக்குழு தனது பரிந்துரையை சமீபத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில்,அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட் டால் அது நீண்டகால அடிப்படையில் மிகப் பெரும் பாதிப்பைஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது. தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை (டிராய்) ஆணையமும் இக்கருத்தை சுட்டிக்காட்டியுள்ளது. அதேபோல கட்டிடங்களுக்குள் 5ஜி அலைக்கற்றை செல்வதில் உள்ள பிரச்சினை குறித்தும் டிராய்கவலை தெரிவித்துள்ளது. இந்நிலையில் அலைக்கற்றை ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

2022-23-ம் நிதி ஆண்டில் 5ஜி சேவையை அளிக்க முன்வரும் தனியார் தொலைத் தொடர்புநிறுவனங்களுக்காக இந்த ஏலம்நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிராய் அமைப்பு 5 ஜி ஏலம் குறித்த விரிவான தகவலை வெளியிட்டது. அதில் விலை, அளவு மற்றும் நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன.

<?php // } ?>
read-entire-article