Home Cinema கலகத் தலைவன் Review: கவனத்துக்கு உரியவன்தான்… எப்போது?

கலகத் தலைவன் Review: கவனத்துக்கு உரியவன்தான்… எப்போது?

15
0


பெருநிறுவனத்தை எதிர்த்து களமாடும் ‘காமன் மேன்’ ஒருவனின் போராட்டம்தான் ‘கலகத் தலைவன்’. வஜ்ரா என்ற கார்பரேட் நிறுவனம் தன்னுடைய புதிய கனரக வாகனம் ஒன்றை சந்தையில் அறிமுகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், அந்த வாகனம் உமிழும் மாசுபாட்டின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகளவில் இருக்கும் ரகசியம் வெளியில் கசிய, நிறுவனம் அதிர்ச்சியடைகிறது. இதுபோன்ற ரகசியங்களை கசியவிடும் ‘விசில் ப்ளோயர்கள்’ எனப்படும் உளவாளிகளை கண்டறிந்து அவர்களை தடயமின்றி அழிக்கும் பொறுப்பு அர்ஜூனுக்கு (ஆரவ்) கொடுக்கப்படுகிறது. அவர் தன் வேட்டையைத் தொடர, அது திருமாறன் (உதயநிதி ஸ்டாலின்) வாழ்க்கையில் எந்த மாதிரியான தாக்கத்தை நிகழ்த்துகிறது? இந்த ‘விசில் ப்ளோயர்கள்’ யார்? அவர்களின் நோக்கம் என்ன? இதுதான் ‘கலகத் தலைவன்’ படத்தின் திரைக்கதை.

இம்முறை கார்ப்பரேட் அரசியலை கையிலெடுத்து திரையில் களமாடியிருக்கிறார் இயக்குநர் மகிழ்திருமேனி. பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அரசு, இந்தியாவின் ஏதோ ஒருபகுதியில் நடக்கும் தனியார் மயமாக்கல் கடைக்கோடி மனிதனை பாதிப்பது, சந்தைப் பொருளாதாரம், கார்ப்பரேட் உளவாளிகள், சுற்றுச்சூழல் பாதிப்பு என பல்வேறு விஷயங்களை பேச முயன்றிருக்கிறார் இயக்குநர். அதை வெறும் பிரச்சார பாணியில் இல்லாமல் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் திருப்பங்களுடன் கொண்டு சென்ற விதத்தில் படம் கவனம் பெறுகிறது.

Previous article108 வைணவ திவ்ய தேச உலா – 68 | தேவப்பிரயாகை நீலமேகர் கோயில்
Next articleஇந்திய அணியை கிண்டல் செய்த பாகிஸ்தான் பிரதமருக்கு இர்பான் பதான் பதிலடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here