Home Cinema புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் ரஜினியின் ‘பாபா’

புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் ரஜினியின் ‘பாபா’

23
0


மறு படத்தொகுப்பு மற்றும் டால்பி மிக்ஸ் ஒலிக் கலவையுடன் ரஜினியின் ‘பாபா’ திரைப்படம் மீண்டும் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2002-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘பாபா’. இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினிகாந்தே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களின் தொடர் வெற்றிக்கு பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் நான்காவது முறையாக ‘பாபா’ படத்தை இயக்கினார் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா. கதாநாயகியாக மனிஷா கொய்ராலா நடிக்க, முக்கிய வேடங்களில் கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார் ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Previous articleவீராங்கனைகள் இனி அடர்நிற அண்டர் ஷார்ட்ஸ் அணியலாம்: ‘ஆல் ஒயிட்’ ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்தியது விம்பிள்டன்
Next article108 வைணவ திவ்ய தேச உலா – 55 | திருப்பவளவண்ணம் பவளவண்ண பெருமாள் கோயில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here