ஹிந்தியில் ரூ.300 கோடி வசூலைக் கடந்த 'கேஜிஎப் 2'

3 week_ago 11
ARTICLE AD BOX

பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், ரவீனா டான்டன் மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'கேஜிஎப் 2' படம் ஹிந்தியில் தொடர்ந்து வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது.

இரண்டு நாட்களிலேயே ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்த இந்தப் படம் தற்போது 11 நாட்களில் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளது. இதன் மூலம் ஹிந்தியில் 300 கோடி வசூலைக் கடந்த படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

இதற்கு முன்பாக ''பிகே, பஜ்ரங் பைஜான், சுல்தான், டங்கல், டைகர் ஜிந்தா ஹை, பத்மாவத், சஞ்சு, வார், பாகுபலி 2” ஆகிய படங்கள் ரூ.300 கோடி வசூலைக் கடந்துள்ளன. அவற்றில் 'பாகுபலி 2' படம் மட்டும் ரூ.500 கோடி வசூலைக் கடந்துள்ளது.

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் 'டங்கல்'. அந்தப் படத்தின் மொத்த வசூல் ரூ.387 கோடி. அதை 'கேஜிஎப் 2' முறியடித்துவிடும் என பாலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். 11 நாட்களிலேயே ரூ.300 கோடி வசூலைக் கடந்த 'கேஜிஎப் 2' படம் 11 வாரங்கள் ஓடி 'டங்கல்' வசூலித்து ரூ.387 கோடியைக் கடக்காதா என்ன ?.

read-entire-article