ஸ்டாலினுக்கு வணக்கம், உதயநிதிக்கு 'ஹக்' - விஜய்யின் எதிர்பாராத சந்திப்பு

1 month_ago 9
ARTICLE AD BOX

செய்திப்பிரிவு

Last Updated : 06 Apr, 2022 10:01 PM

Published : 06 Apr 2022 10:01 PM
Last Updated : 06 Apr 2022 10:01 PM

<?php // } ?>

நடிகர் விஜய் நடிப்பில் 'பீஸ்ட்' படம் வரும் 13-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வரும் நிலையில், இன்று தனது 66-வது பட பூஜையில் விஜய் கலந்துகொண்டார். வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார். தமன் இசையமைக்க உள்ளார். விஜய் பூஜையில் கலந்துகொண்ட புகைப்படம் இன்று காலை முதல் இணையத்தில் வைரலானது.

தற்போது விஜய்யின் மற்றொரு புகைப்படம் வைரலாகி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பு புகைப்படம்தான் அது. ஏஜிஎஸ் சினிமாஸ் மற்றும் தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வரும் கல்பாத்தி எஸ் அகோரம் இல்ல திருமண விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார் நடிகர் விஜய்.

மணமக்களை வாழ்த்திவிட்டு, வெளியேறும்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்தார். முதல்வர் ஸ்டாலின் வருவதை அறிந்த விஜய், அங்கேயே நின்று அவரை வரவேற்றார். ஸ்டாலினுக்கு வணக்கம் தெரிவித்து இருவரும் சில நிமிடங்களில் பேசிக்கொண்டனர்.

பின்னர் உதயநிதி ஸ்டாலினையும் சந்தித்தார் விஜய். கடைசியாக விஜய் ஸ்டாலின் சந்தித்து கொண்டது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாத சமயத்தில் நடந்தது. காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சை பெற்று வந்த போது ஸ்டாலினை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் விஜய்.

அதன்பிறகு பல மாதங்களுக்கு பிறகு இருவரும் நேரில் சந்தித்து கொண்டுள்ளனர். இவர்களின் எதிர்பாராத சந்திப்பு தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம்தான் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

<?php // } ?>

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

read-entire-article