விவசாயத்தின் அடிப்படை, மண்ணில் விதையைத் தூவி நீர் விட்டால் வளரும்.
இதனை முறையாக யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
சமையலறையில் எஞ்சுகிற கழிவை சில தொட்டிகளில் போட்டு வைத்தால் அக்கழிவு உரமாகி விடும். அதனுள் மண்ணைக் கொட்டி விதையைப் போட்டால் செடி வளர ஆரம்பித்துவிடும்.
மாடு வளர்ப்பவர்களிடம் எரு வாங்கிக்கொண்டு அதை மண்ணோடு கலந்துகொண்டால் சத்து கிடைக்கும். அதைப் பயன்படுத்தினால் செடி நன்கு வளரும்.
பூண்டு, இஞ்சி
இஞ்சி – மிளகாய் – பூண்டு ஆகியவற்றை அரைத்து அவற்றைத் தெளித்தால் பூச்சித் தொந்தரவு இருக்காது.
தக்காளி
உருளைக்கிழங்கை சில நாள்கள் விட்டால் அதிலிருந்து முளைகட்டிவிடும். அதன் பிறகு, அதை நட்டு வளர்க்கலாம். தக்காளி போன்றவற்றுக்கு அதன் விதைகளைத் தூவினாலே போதும்.
வீட்டில் சிறிய இடத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்குகள் வைத்துச் செய்யலாம் அல்லது மாடியில் சிறிய தோட்டம் அமைக்கலாம். 2 சென்ட் அளவில் காலி இடம் இருக்கிறதென்றால் தாராளமாகப் பண்ணையே அமைக்கலாம்.
மைக்ரோ க்ரீன் கான்செப்ட் தற்போது நடைமுறையில் இருக்கிறது. உதாரணத்துக்கு, பீட்ரூட் செடியில் இலை வந்ததுமே, சாலட்டுக்காக அதனை விற்பனை செய்யலாம்.
விவசாயம்தான் செய்ய வேண்டும் என்றில்லை. விதை மற்றும் கன்று உற்பத்தி செய்தும் விற்கலாம். உதாரணத்துக்கு தக்காளி விதை விற்பனை செய்தால் ஒரு தக்காளியிருலிருந்து 200 ரூபாய் ஈட்டலாம்.
வீட்டுத்தோட்டத்தில் விளைவித்ததை சமூக வலைதளங்கள் மூலம் விற்கலாம். இல்லையென்றால் வீட்டின் அருகில் உள்ள கடைகளுக்கேகூட விற்பனை செய்யலாம்.
This post was created with our nice and easy submission form. Create your post!