வர்த்தக சவால்களை சமாளிக்க அமைப்பு; இந்தியா - ஐரோப்பிய யூனியன் முடிவு

3 week_ago 11
ARTICLE AD BOX

புதுடில்லி, : டில்லியில் நேற்று, ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் - பிரதமர் நரேந்திர மோடி இடையில் நடந்த சந்திப்பில், வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்ள, அமைப்பு ஒன்றை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.ஐரோப்பிய யூனியனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

நேற்று காலை, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்ற உர்சுலா, அங்கு மலர் வளையம் வைத்து காந்திக்கு மரியாதை செலுத்தினார்.பின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் சந்தித்துப் பேசினார். இதில், உக்ரைன் - ரஷ்யா இடையில் நடந்து வரும் போரால், தங்கள் பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்கள் குறித்து, இருவரும் ஆலோசனை நடத்தினர்.இதைத்தொடர்ந்து, உர்சுலா பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.

இருவரும், இந்திய மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.இந்த சந்திப்பில், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பில் உள்ள சவால்களை எதிர்கொள்ள, அமைப்பு ஒன்றை உருவாக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அந்த அமைப்புக்கு, ஐரோப்பிய யூனியன் - இந்தியா வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் என பெயரிடப்பட்டுள்ளது.இதுபோன்ற ஒரு அமைப்பை, இந்தியா தன் நட்பு நாடுகளுடன் இதுவரை அமைத்தது இல்லை. இதுவே முதன்முறையாகும்.

Advertisement

read-entire-article