வயது குறைந்த ஒருவரை காதலிப்பது தவறா - மலாய்க்கா அரோரா

3 week_ago 11
ARTICLE AD BOX

பாலிவுட்டில் அடிக்கடி காதல் சர்ச்சைகள் வருவது வழக்கம். அது போலவே பிரிவு சர்ச்சைகளும் வழக்கம். கடந்த சில வருடங்களாக வயது வித்தியாசம் குறித்து சர்ச்சையில் இருக்கும் காதல் ஜோடி மலாய்க்கா அரோரா, அர்ஜுன் கபூர் ஜோடி.

இந்த அர்ஜுன் கபூர் வேறு யாருமல்ல, 'வலிமை' படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன்தான். மலாய்க்காவிற்கு 48 வயது ஆகிறது. அர்ஜுன் கபூருக்கு 36 வயதாகிறது. தன்னை விட 12 வயது குறைந்த ஒருவரை மலாய்க்கா காதலிப்பது குறித்து அடிக்கடி சர்ச்சைகள் வந்து கொண்டிருக்கிறது. இருவரும் ஜோடியாக பல இடங்களுக்குப் போவது வழக்கம்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து மலாய்க்கா பேசுகையில், “ஒரு பெண் அவரை விட வயது குறைந்த ஆண் ஒருவரைக் காதலிப்பது குறித்து பேசுவதை இந்த சமூகம் நிறுத்த வேண்டும். ஒரு ஆண், அவனை விட பாதி வயதுடைய பெண்ணைக் காதலித்தால் எந்தக் கேள்வியும் எழுவதில்லை. ஆனால், ஒரு பெண் அப்படி செய்தால் அதைக் குற்றமாகப் பார்க்கிறார்கள். ஏன் ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதி,” என கேள்வி எழுப்புகிறார் மலாய்க்கா.

மலாய்க்காவிற்கு நடிகரும், இயக்குனருமான அர்பாஸ் கான் உடன் 1998ல் திருமணம் நடந்து 2017ல் விவாகரத்து நடந்துவிட்டது. கடந்த ஆறு வருடங்களாக மலாய்க்காவும், அர்ஜுனும் காதலித்து வருகிறார்கள்.

read-entire-article