Politics

வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சி: பிரதமர் பெருமிதம்


இம்பால் :”இந்திய வளர்ச்சியின் உந்து சக்தியாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் முதல்வர் பீரென் சிங் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது.மாநிலத்தில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

latest tamil news

‘ஜல் ஜீவன்’ திட்டம்

இந்நிலையில் தலைநகர் இம்பாலில் 4,815 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:நாட்டில் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்தும் இயற்கை வளம் மிக்கவை, ஆனால் மத்தியில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன் வரை வடகிழக்கு மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டன. வடகிழக்கு மாநிலங்கள் மீது கடந்த ஏழு ஆண்டுகளாக தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பிரதமராவதற்கு முன் பலமுறை இங்கு வந்துள்ளேன். உங்கள் மனதில் உள்ள வேதனைகளை அறிந்துள்ளேன்.

இதனால் தான் 2014க்கு பின் மத்திய அரசின் அனைத்து துறைகளையும் உங்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்தேன்.சில ஆண்டுகளுக்கு முன் வரை மணிப்பூரில் 6 சதவீத மக்களே குழாய் மூலம் தங்களது வீட்டில் குடிநீர் பெற்றனர். ஆனால் தற்போது ‘ஜல் ஜீவன்’ திட்டம் வழியாக, இந்த எண்ணிக்கை 60 சதவீதமாக அதிகரித்து உள்ளது.மாநிலத்தில் நீங்கள் அமைத்த நிலையான அரசு, முழு பெரும்பான்மையுடன் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி உங்களுக்காக உழைத்து வருகிறது.’கிழக்கை பார்க்காதீர்கள்’ என்ற ஒற்றை கொள்கையை மத்தியில் முன்பிருந்த அரசு பின்பற்றி வந்தது.ஆனால், தற்போது நாங்கள் கிழக்கு நோக்கிய பார்வை என்ற கொள்கையை பின்பற்றி வருகிறோம்.

பாதுகாப்பின்மை

இந்தியா இன்று ஆயிர கணக்கான கோடிக்கு பாமாயில் இறக்குமதிக்கு செலவு செய்து வருகிறது. இதில் நாடு தன்னிறைவு பெற வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதனால் வடகிழக்கு மாநிலங்களின் விவசாயிகள் பயன்பெறுவர். மணிப்பூரை தடை மிகுந்த மாநிலமாக முந்தைய அரசுகள் மாற்றியதை அறிவீர்கள். மக்களின் ஒற்றுமையை உடைக்க அரசியல் செய்தன. ஆனால் பயங்கரவாதம் மற்றும் பாதுகாப்பின்மையை அகற்றி, வளர்ச்சி மற்றும் அமைதி நிலவுவதை தற்போதுள்ள ‘இரட்டை இன்ஜின்’ அரசு உறுதி செய்துள்ளது.

நடவடிக்கை

இந்திய வளர்ச்சியின் உந்து சக்தியாக வடகிழக்கு மாநிலங்கள் திகழ்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பிரதமர் பேசினார்.

ஊழல் வண்டி நிறுத்தம்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் அகர்தலாவில் உள்ள விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டாவது முனையத்தை, நேற்று திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:திரிபுராவில் ஒரு காலத்தில் ஊழல் என்கிற வண்டி, தட்டுதடுமாறாமல் வேகமாக சென்று கொண்டிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த வண்டி முடக்கப்பட்டுள்ளது.பின்தங்கிய மாநிலமாக இருந்த திரிபுரா இப்போது வளர்ச்சிபாதையில் பயணிக்க துவங்கி விட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வதால் திரிபுரா மக்கள் பலன் அடைந்து வருகின்றனர்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

ஊழல் வண்டி நிறுத்தம்

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் அகர்தலாவில் உள்ள விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட இரண்டாவது முனையத்தை, நேற்று திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
திரிபுராவில் ஒரு காலத்தில் ஊழல் என்கிற வண்டி, தட்டுதடுமாறாமல் வேகமாக சென்று கொண்டிருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த வண்டி முடக்கப்பட்டுள்ளது.பின்தங்கிய மாநிலமாக இருந்த திரிபுரா இப்போது வளர்ச்சிபாதையில் பயணிக்க துவங்கி விட்டது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்வதால் திரிபுரா மக்கள் பலன் அடைந்து வருகின்றனர்.இவ்வாறு பிரதமர் பேசினார்.

What's your reaction?

Related Posts

1 of 247