ரிலையன்ஸ் கைவிட்டதால் பியூச்சர் பங்குகள் சரிவு

2 week_ago 14
ARTICLE AD BOX

புதுடில்லி : முகேஷ் அம்பானி தலைமையிலான ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம் கைவிட்டதை அடுத்து, ‘பியூச்சர்’ குழுமத்தின் பங்குகள் விலை, நேற்று 20 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டன.

பியூச்சர் குழுமத்தின் சில்லரை விற்பனை வணிகத்தை, அதன் கிடங்குகளுடன் சேர்த்து, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு வாங்க, ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ முன்வந்தது.ஆனால், இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ‘அமேசான்’ நீதிமன்றத்துக்கு சென்றது.

இதன் காரணமாக, ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தம் நிறைவேறுவதில் காலதாமதம் ஏற்பட்டது.இதற்கிடையே, பியூச்சர் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், ரிலையன்ஸ் உடனான ஒப்பந்தத்தை ஏற்கவில்லை.இந்நிலையில், பியூச்சர் ரீடெய்லை கையகப்படுத்தும் முடிவிலிருந்து பின்வாங்கியது,

ரிலையன்ஸ்.தற்போது, பியூச்சர் குழுமம் அதன் ‘பியூச்சர் லைப்ஸ்டைல், பியூச்சர் சப்ளை செயின், பியூச்சர் கன்ஸ்யூமர்’ ஆகிய நிறுவனங்களை, மீண்டும் கட்டி எழுப்பி, காப்பாற்றும் முயற்சியில் இறங்கி உள்ளது.இருப்பினும், பியூச்சர் குழுமத்தின் முக்கியமான நிறுவனமான பியூச்சர் ரீடெய்ல், 18 ஆயிரம் கோடி ரூபாய் கடனுடன், திவால் நடவடிக்கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

read-entire-article