ராணுவ தளபதியால் ஆட்சி கவிழ்ந்தது - இம்ரான் கான் புகார்

3 week_ago 14
ARTICLE AD BOX
<?php // } ?>

லாகூர்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணிக் கட்சிகள் விலக்கி கொண்டன. இதையடுத்து நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். புதிய பிரதமாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பதவி யேற்றார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று கூறும்போது, “எனது அரசு கவிழ்க்கப்பட்டதற்கு நாட்டின் சக்திவாய்ந்த அமைப்பில் (ராணுவத்தில்) தவறான வழியில் செயல்படும் சில சக்திகளே காரணம். ஓரிருவர் தவறாக செயல்படுவதற்கு ஒட்டுமொத்த அமைப்பையும் நாம் குற்றம் சொல்ல முடியாது. நாட்டின் எல்லா அமைப்புகளும் கெட்டுப் போகவில்லை. ஆனால் சில சக்திகள் தவறான வழியில் செயல்படுகின்றன” என்றார்.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் பாஜ்வாவையே இம்ரான் கான் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.

<?php // } ?>
read-entire-article