ARTICLE AD BOX
Last Updated : 10 Apr, 2022 02:35 PM
Published : 10 Apr 2022 02:35 PM
Last Updated : 10 Apr 2022 02:35 PM

'நாய் சேகர்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சதீஷின் அடுத்தப்பட அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியிருக்கிறது. 'சட்டம் என் கையில்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் சதீஷ். தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார். முன்னதாக நாயகனாக அறிமுகமான நாய் சேகர் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சதீஷின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'சட்டம் என் கையில்' என்று தலைப்பிட்டுள்ள இப்படத்தினை 'சிக்சர்' பட இயக்குநர் சாச்சி இயக்கியுள்ளார். கோகுலகிருஷ்ணன் சண்முகம், ஸ்ரீராம் சத்யநாராயணன், பரத்வாஜ் முரளி கிருஷ்ணன் உள்ளிட்டோர் தயாரிக்கிறார்கள்.
பி.ஜி முத்தையா ஒளிப்பதிவு செய்ய ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். போஸ்டரில் சதீஷ் இதுவரை இல்லாத புதிய லுக்கில் காட்சியளிக்கிறார்.