யூடியூப்பில் வெளியானது ஆர்ஆர்ஆர் 'நாட்டு கூத்து' பாடல்

1 month_ago 13
ARTICLE AD BOX
<?php // } ?>

ராஜமௌலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் மிகப் பிரபலமான 'நாட்டு கூத்து' பாடல் வீடியோ யூடியூப்பில் வெளியானது. 5 மொழிகளில் வெளியான இந்தப் பாடலை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

ராஜமௌலியின் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் கடந்த மாதம் 25-ம் தேதி வெளியானப் படம் 'ஆர்ஆர்ஆர்'. தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படம், உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் வெளியாகி 15 நாட்களிலேயே உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.

குறிப்பாக, இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் இணைந்து நடனமாடிய 'நாட்டு கூத்து' பாடல் பெரும் வரவேற்பை பெற்றது. அவர்களது நடனம் பெரிய அளவில் பேசப்பட்டது. எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்.

இந்நிலையில், திரையரங்கில் மட்டுமே பார்த்த இந்தப் பாடல் யூடியூப்பில் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது அந்தப் பாடல் வீடியோ 5 மொழிகளிலும் யூடியூப்பில் வெளியாகியுள்ளது.

<?php // } ?>

தவறவிடாதீர்!

read-entire-article