மோகன் ஜி படத்தில் இணைந்த நடிகர் நட்ராஜ் - இம்மாத இறுதியில் படப்பிடிப்பு

1 month_ago 11
ARTICLE AD BOX

செய்திப்பிரிவு

Last Updated : 10 Apr, 2022 01:47 PM

Published : 10 Apr 2022 01:47 PM
Last Updated : 10 Apr 2022 01:47 PM

<?php // } ?>

மோகன் ஜி இயக்கும் புதிய படத்தில் அவருடன் நடிகர் நட்ராஜ் இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் மோகன் ஜி. அவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான ருத்ர தாண்டவம் திரைப்படம் குறைந்த முதலீட்டில் பெரும் லாபத்தை ஈட்டியது. இந்தப் படத்தில் ரிஷி ரிச்சர்ட், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்நிலையில் அடுத்ததாக அவர்ஃ ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் புதிய பட உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளார்.

'புரோடக்ஷன் நம்பர் 3' என அழைக்கப்படும் அந்தப் படத்தில், நாயகனாக செல்வராகவன் நடிக்க உள்ளதாக ஏற்கெனவே மோகன் ஜி தெரிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, படத்தில் நட்டி என்று அழைக்கப்படும் நடிகர் நட்ராஜூம் இணைந்துள்ளார். மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

<?php // } ?>

தவறவிடாதீர்!

read-entire-article