Movies

முதல் பார்வை: 83 – ஒரு ‘விளையாட்டான’ பொழுதுபோக்கு சினிமா!


1983-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய அணிகளுக்கு எதிராக இந்தியா பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ளது ‘83’. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, கிரிக்கெட் பிரியர்களும் மிகவும் எதிர்பார்த்த இப்படம் நிறைவாக இருந்ததா? – இதோ முதல் பார்வை…

கபில் தேவ் (ரன்வீர் சிங்) தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்து பயணிக்கிறது. ஆரம்பம் முதலே உள்ளூர்க்காரர்கள் முதல் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் வரை இந்திய அணியின் மீது அவநம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். அரை இறுதி ஆட்டத்துக்கு முன்பாகவே ரிட்டர்ன் டிக்கெட் கூட போட்டு விடுகின்றனர். மைதானத்திலேயே இந்தியாவைச் சேர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் கபில் தேவின் காதுபடவே கேவலமாக பேசுகின்றனர். அந்தளவுக்கு இந்திய அணி என்றாலே அனைவரும் இளக்காரமாக பார்க்கின்றனர். எனினும் கேப்டன் கபில் தேவ் தன் அணியின் மீது நம்பிக்கை இழக்காமல் இருக்கிறார்.

What's your reaction?

Related Posts

1 of 266