முதல் பாகத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு 2ம் பாகத்தில் பதில்: ஜீவி 2 இயக்குனர் சொல்கிறார்

3 week_ago 10
ARTICLE AD BOX

மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தற்போது தயாரித்து முடித்துள்ள படம் ஜீவி 2ம் பாகம். 2019ல் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ஜீவி. வி.ஜே.கோபிநாத் இயக்கி இருந்தார். தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் நடித்த வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, 'அருவி' திருநாவுக்கரசு என அனைவருமே இந்தப்படத்திலும் தொடர்கிறார்கள்.

அதேபோல ஒளிப்பதிவாளர் பிரவீண் குமார், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பாளர் பிரவீண் கே.எல் என அதே வெற்றி தொழில்நுட்பக் கூட்டணி தான் இந்தப்படத்திலும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

படம் குறித்து இயக்குனர் வீ.ஜே.கோபிநாத் கூறியதாவது: எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்துகொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பது தான் முதல் பாகத்தின் கதை..

இந்த தொடர்பியல் விதி அத்துடன் முடிந்து விட்டதா, இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில் தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது. மீண்டும் இவர்கள் வாழ்வில் தொடர்பியல் விதி விளையாடியதா..? அதன்மூலம் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின,? அதையெல்லாம் நாயகன் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்து அதை சரி செய்தாரா? என்பதை ஜீவி2-வில் சொல்லியிருக்கிறோம். என்கிறார் இயக்குநர் கோபிநாத்.

read-entire-article