ARTICLE AD BOX
Last Updated : 22 Apr, 2022 01:24 PM
Published : 22 Apr 2022 01:24 PM
Last Updated : 22 Apr 2022 01:24 PM

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தன்னார்வலர்களாக கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடக்கவுள்ளது. இந்த ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், டி.ஜி.பி சைலேந்திர பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் உள்பட 23 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். செ
ஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த ஆய்வு கூட்டங்களை ஒருங்கிணைப்புக்குழு மேற்கொள்ளும் என்றும் போட்டியை சிறப்பாக நடத்த ஆலோசித்து பணிகளைச் செய்யும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தொடரில் தன்னார்வலர்களாக பணிபுரிய விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அகில இந்திய செஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
— All India Chess Federation (@aicfchess) April 22, 2022இதன்படி 18 முதல் 30 வயது வரை உள்ள, நன்றாக ஆங்கிலம் தெரிந்த, அகில இந்திய செஸ் கூடடமைப்பில் பதிவு செய்தவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படுபவர்கள் 20 நாட்கள் போட்டி நடக்கும் இடத்தில் தங்கி பணிபுரிய வேண்டும்.
தவறவிடாதீர்!
- IPL 2022 | கேட்ச்களை நழுவவிட்ட சிஎஸ்கே வீரர்கள்; 2 வாய்ப்புகளை தவறவிட்ட ஜடேஜா
- IPL 2022 | 'உங்கள் ஆட்டத்தை பார்க்கவே மகிழ்ச்சியாக உள்ளது'- 'தல' தோனியை பாராட்டிய 'தளபதி' ரெய்னா
- IPL 2022 | பினிஷர் தோனி... கடைசி பந்தில் சென்னைக்கு கிடைத்த வெற்றி
- IPL2022 | ஏமாற்றிய ரோஹித் ஷர்மா... கைகொடுத்த திலக் வர்மா - சென்னை அணிக்கு 156 ரன்கள் இலக்கு
Sign up to receive our newsletter in your inbox every day!