ARTICLE AD BOX
Last Updated : 18 Apr, 2022 01:11 PM
Published : 18 Apr 2022 01:11 PM
Last Updated : 18 Apr 2022 01:11 PM

மும்பை: அண்மையில் மறைந்த தனது சகோதரி குறித்த நீங்கா நினைவுகளை உருக்கமான பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேல்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்ஷல் படேல். இவரது சகோதரி கடந்த 9 ஆம் தேதி மறைந்தார். அதன் காரணமாக தனது குடும்பத்துடன் தன் நேரத்தை செலவிடும் விதமாக ஐபிஎல் பயோ பபுளில் இருந்து வெளியேறினார் ஹர்ஷல் படேல். தற்போது தனது அணியினருடன் மீண்டும் அவர் இணைந்துள்ளார்.
இந்நிலையில், தனது சகோதரியின் பேரிழப்பை தாங்க முடியாமல் உருக்கமான பதிவின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார் அவர். அதனை அவரது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளது… "அக்கா, நம் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் முக்கியமான நபர். கனிவான குணம் படைத்தவர். இறுதி மூச்சு வரையில் வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொண்ட கஷ்டங்கள் அனைத்தையும் மாறா புன்னகையுடன் எதிர்கொண்டீர்கள். இந்தியாவுக்கு நான் விளையாட வருவதற்கு முன்பாக உங்களுடன் இருந்தேன். அப்போது நீங்கள் என்னை விளையாட்டில் கவனம் செலுத்தச் சொன்னீர்கள். உங்களைக் குறித்து கவலை கொள்ளவும் வேண்டாம் எனச் சொன்னீர்கள். உங்களுடைய அந்த வார்த்தைகளுக்காக தான் நான் மீண்டும் களத்திற்கு திரும்பக் காரணம்.
உங்களை நினைவு கொள்ளவும், கவுரவிக்கவும் என்னால் இப்போதைக்கு செய்ய முடிந்தது இதுதான். வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், நல்லவை - கெட்டவை என அனைத்திலும் நான் உங்களை மிஸ் செய்வேன். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
தவறவிடாதீர்!
- IPL 2022 | நடப்பு சீசனில் ஒரே போட்டியில் அதிக ரன்களை கொடுத்த சிஎஸ்கே பவுலர் ஜோர்டான்
- மில்லர் விளாசலில் வீழ்ந்தது சிஎஸ்கே அணி
- IPL 2022 | உம்ரான் மாலிக், புவனேஸ்குமார் வேகத்தில் வீழ்ந்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள் - ஹைதராபாத் அணிக்கு 152 ரன்கள் இலக்கு
- IPL 2022 | பிரகாசிக்காத மிடில் ஆர்டர் - டெல்லியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி
Sign up to receive our newsletter in your inbox every day!