பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பளம் : கவர்னர் தமிழிசை உறுதி

3 week_ago 14
ARTICLE AD BOX

புதுச்சேரி, ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருப்பவர்களே வாழ்க்கையை அனுபவிப்பவர்கள்'என, கவர்னர் தமிழிசை பேசினார்.புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:வாய்ப்புகள் வரும்போது பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, வாய்ப்புகளை பெருக்கி கொள்வதில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.இது, போட்டி நிறைந்த வாழ்க்கை. உங்களுக்கு ஒரு மொழி தெரிந்தால், மற்றொருவருக்கு 3 மொழி தெரிந்திருந்தால் வாய்ப்பு அவருக்கு சென்றுவிடும். போட்டி நிறைந்த உலகத்தில் நாம் வாய்ப்புகளை விரிவுபடுத்திக் கொண்டே போக வேண்டும்.ஒவ்வொரு நாளும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். வேறு மொழி, வேறு கலையை கற்றுக் கொள்ள வேண்டும். இதனால் வாய்ப்புகளை பெருக்க முடியும். மாணவர்கள் தங்களை புதுப்பித்துக்கொள்ள, மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.பேராசிரியர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது பல்கலைக்கழகத்தின் கடமை. பேராசிரியர்கள், ஊழியர்களுக்கு மாதந்தோறும் சரியான நேரத்தில் சம்பளம் வழங்கப்படும் என உறுதிப்பட கூறுகிறேன்.நான் 6ம் வகுப்பு படிக்கும்போது ஆசிரியரிடம், எம்.எல்.ஏ.,வாக ஆக வேண்டும் என்றேன். என் அம்மா என்னை அடித்து டாக்டராக வேண்டும் என்றார். நான் அம்மாவின் ஆசையை நிறைவேற்றிவிட்டு, அரசியல்வாதியானேன். பெற்றோர்களுக்கான கடமையை நாம் நிறைவேற்ற வேண்டும்.இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் சவாலானது. இந்த சவால்களை நாம் எதிர்கொண்டே ஆக வேண்டும். வாய்ப்பு வரும்வரை திருமண வாழ்க்கையை தள்ளிப் போடுகிறார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் சரியான நேரத்தில் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க வேண்டும்.பெண்கள் சாதனை செய்ய 30, 35 வயதை கடக்கிறார்கள். அது மருத்துவரீதியில் பல பிரச்னைகளை உருவாக்கும். வாழ்க்கை வாழ்வதற்குத்தான். ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக இருப்பவர்களே வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். சிரித்துக்கொண்டே இருங்கள். சிரிப்பவர்களுக்குத்தான் இந்த வாழ்க்கை. சிரித்தால் நோய்கள் வராது.இவ்வாறு, கவர்னர் பேசினார்.

Advertisement

read-entire-article