பெட்ரோல், டீசல் விலை 14-வது நாளாக உயர்வு

1 month_ago 11
ARTICLE AD BOX
<?php // } ?>

சென்னை: பெட்ரோல், டீசல் விலை 14-வது நாளாக நேற்றும் உயர்ந்தது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கால் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த மாதம் 22-ம் தேதி இவைகளின் விலை உயர்த்தப்பட்டது. அதன் பிறகு தினமும் விலை உயர்த்தப்பட்டு வரப்படுகிறது. இதனால், தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து 14-வது நாளாக சென்னையில் நேற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.110.85-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.100.94-க்கும் விற்பனையாகிறது. மேலும், கடந்த 14 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.9.45-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.9.51-ம் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

<?php // } ?>
read-entire-article