பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கூடுதலாக 15 ரன்களை கொடுத்ததால் தோல்வி - லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் வருத்தம்

3 week_ago 8
ARTICLE AD BOX
<?php // } ?>

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூடுதலாக 15 ரன்களை கொடுத்ததால் தோல்வி அடைந்தோம் என லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது. 182 ரன்களை துரத்திய லக்னோ அணியால் 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. போட்டி முடிவடைந்ததும் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறும்போது, “பந்து வீச்சை நாங்கள் நன்றாக ஆரம்பித்தோம், முதல் ஓவரிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தினோம். ஆனால் அதன் பின்னர் பவர் பிளேயில் 50 ரன்களை விட்டுக் கொடுத்துவிட்டோம். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம்.

இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் என்பது, 15-20 ரன்கள் கூடுதல் ஆகும், நடு ஓவர்களில் அழுத்தம் கொடுக்க முடியவில்லை. பேட்டிங்கில் முதல் மூன்று பேரில் ஒருவர் நிலைத்து நின்று விளையாடுவது தேவையாக இருந்தது. மற்ற பேட்ஸ்மேன்கள் அவரைச் சுற்றி பேட் செய்ய வேண்டும், துரதிருஷ்டவசமாக நாங்கள் அதை செய்ய முடியவில்லை. எங்களிடம் ஒரு நல்ல அணி உள்ளது, நாங்கள் எப்படி விளையாடுகிறோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சியடை கிறோம்” என்றார்.

இன்றைய ஆட்டம் சென்னை - மும்பை

நேரம்: இரவு 7.20 நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

<?php // } ?>
read-entire-article