Movies

புஷ்பா: குத்துப் பாடலில் முற்போக்கு…மொத்தப் படத்தில் பிற்போக்கு!


"மரக்கட்டையப் பிடிக்க வந்த ஆம்பளைன்னு பார்த்தா, சட்டையப் பிடிக்க வந்த…" என்று அந்த வசனத்தை முடிக்காமலே அந்த வார்த்தையின் முடிவை பார்க்கும் ரசிகர்களிடம் விட்டுவிடுவார் 'புஷ்பா' படத்தின் நாயகன் அல்லு அர்ஜூன்.

சமந்தாவின் வைரல் ஹிட் பாடலான 'ஊ சொல்றியா மாமா… ஊ ஊ சொல்றியா மாமா…' பாடலில் பெண்கள் குறித்த உருவ கேலிகளுக்கு எதிராகவும், பெண்களை மோகப் பொருளாகப் பார்க்கும் பார்வையை விமர்சித்து முற்போக்கு வரிகள் எழுதப்பட்டிருக்கும். இதன் காரணமாக இப்பாடலின் வரிகளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் எழுதப்படுவதைப் பார்க்கலாம். ஆனால், இப்பாடலின் வரிகளுக்கும் படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகளுக்கும் இடையே அவ்வளவு முரண். 'பெண்களை அப்படி பார்க்காதீங்க… இப்படி பார்க்காதீங்க' என்று பாடலில் மட்டும் எழுதிக்கொள்ள இயக்குநர் சுகுமார் அனுமதித்தாரா என்று தெரியவில்லை. படத்தின் பல காட்சிகளில் பெண்களை மட்டம் தட்டும் பிற்போக்குக் காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ளன.

What's your reaction?

Related Posts

1 of 298