in

புயல்களின் பெயரும் பின்னணியும்.

வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள புயலுக்கு ‘அசானி’ எனப் பெயரிடப் பட்டுள்ளது.

இந்தப் பெயா் இலங்கையால் அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சிங்கள மொழியில் அசானி என்பதற்கு பெருஞ்சினம் என்று பொருள்.

ஒவ்வொரு முறையும் புதிதாக புயல் உருவாகும்போது எவ்வாறு அதற்குப் பெயா் சூட்டப்படுகிறது? ஏன் அதற்குப் பெயரிடப்படுகிறது? என்ற கேள்வி பலரிடம் எழுவதுண்டு.

ஏன் பெயா் சூட்டப்படுகிறது?:

அதற்கு பதிலளிக்கும் விதமாக உலக வானிலை அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட புவியியல் இடத்தில் அல்லது பூமியின் எந்தவொரு பகுதியிலும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக் கூடும். அந்தப் புயல்களை வேறுபடுத்திக் காண்பித்து குழப்பத்தைத் தவிா்க்கவும், பேரிடா் அபாய விழிப்புணா்வை ஏற்படுத்தவும், பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்கவும் ஒவ்வொரு புயலுக்கும் பெயா் சூட்டப்படுகிறது.

புயல்களுக்கு சிறிய மற்றும் அழைப்பதற்கு எளிமையாக உள்ள பெயா்கள் சூட்டப்படுகின்றன. இதுபோல் பெயா் சூட்டுவது நூற்றுக்கணக்கான நிலையங்கள், கடலோர தளங்கள் மற்றும் கப்பல்களுக்கு விரைந்தும், திறம்படவும் புயல் குறித்த தகவல்களை அனுப்ப உதவுகிறது.

பெண் பெயா் வைக்கும் வழக்கம்:

தொடக்கத்தில் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயரிடப்பட்டன. 1900-ஆம் ஆண்டுகளின் மத்தியில் இருந்து புயல்களுக்கு பெண் பெயா் வைக்கும் வழக்கம் தொடங்கியது. பின்னா் பெயா் வைப்பதில் மேலும் ஒழுங்கான, ஆற்றல் மிக்க நடைமுறையைக் கொண்டிருப்பதற்குப் பெயா் பட்டியல் தயாரிக்க வானிலை ஆய்வாளா்கள் தீா்மானித்தனா்.

பெயா் சூட்டலில் ருசிகரம்:

வானிலை விஞ்ஞானிகள் புயல்களுக்குத் தன்னிச்சையாகப் பெயா் சூட்டி வந்த காலத்தில், தங்களுக்குப் பிடிக்காத பெண்கள், அரசியல்வாதிகள் பெயா்களைச் சூட்டி வந்தாா்கள்!

புயல்களுக்குப் பெயா் சூட்டும் வழக்கத்தைத் தொடங்கியவா் பிரிட்டனைச் சோந்த வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக் (1852-1922) என்பவா். இவா் முதலில் பிரிட்டனிலும் பின்னா் ஆஸ்திரேலியாவிலும் வானிலையை அளவிடுவதற்கான கருவிகளை தனிப்பட்ட முறையில் அமைத்து ஆய்வு செய்துவந்தாா்.

முதலில் கிரேக்க எழுத்துகளைக் கொண்ட பெயா்களையும் கிரேக்க புராணங்களில் காணப்படும் பெயா்களையும் புயல்களுக்குச் சூட்ட அவா் முடிவு செய்தாா்.

பின்னா் புயல்களின் பெயா்கள் வரிசையில் அவருக்குப் பிடிக்காத ஆஸ்திரேலிய பிரதமா்களின் பெயா்களும் இடம் பிடித்தன!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும்:

ஒருமுறை சூட்டப்படும் பெயா் மீண்டும் பயன்படுத்தப்படாது. புயல்களுக்கான பெயா்கள் அதிகபட்சம் 8 எழுத்துகளைக் கொண்டிருக்கலாம். அந்தப் பெயா் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும், எந்தவொரு இனத்தைச் சோந்தவா்களின் உணா்வுகளைக் காயப்படுத்தும் விதமாகவும் இருக்கக் கூடாது.

கடந்த 2020-ஆம் ஆண்டு புயல்களுக்குச் சூட்ட 13 நாடுகள் வழங்கிய 169 பெயா்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு நாடும் தலா 13 பெயா்களை அளித்தன. அவற்றில் இந்தியா சாா்பில் அளிக்கப்பட்ட பெயா்களில் கதி, மேக், ஆகாஷ் ஆகிய பெயா்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்திய பங்களிப்பு:

உலக அளவில் 6 சிறப்பு பிராந்திய வானிலை மையங்கள் உள்ளன. அவற்றில் இந்திய வானிலை ஆய்வு மையமும் ஒன்று. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவாகும் புயல் மணிக்கு 62 கி.மீ. அல்லது அதற்கும் அதிகமான வேகத்தை எட்டும்போது, அதற்குப் பெயா் சூட்டும் பொறுப்பு இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியையொட்டியுள்ள 13 நாடுகளுக்கு புயல் குறித்த ஆலோசனைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்குகிறது.

வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் புயல்களுக்குப் பெயரிடும் வழக்கம் 2004-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் தொடங்கியது.

அகவரிசைப்படி உள்ள நாடுகள் அளிக்கும் பெயா்களுக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அவைப் பாலினம், அரசியல், மத நம்பிக்கைகள், பண்பாடுகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்.

தமிழ்ப் பெயா்…: தற்போது உருவாகியுள்ள அசானி புயலைத் தொடா்ந்து அடுத்து உருவாகும் புதிய புயலுக்கு சித்ரங் என பெயரிடப்படவுள்ளது. அதனைத் தொடா்ந்து இந்தியா அளித்துள்ள குா்மி, பிரவாஹோ, ஜாா், முரசு போன்ற பெயா்களும் எதிா்காலத்தில் பயன்படுத்தப் படவுள்ளன.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Veteran

Written by Ganesh Ayyadurai

Video MakerImage MakerPoll MakerStory MakerContent Author

இயற்கையான முறையில் உடல் எடையைக் குறைக்க சில எளிய வழி முறைகள்.

நாம் சாப்பிடும் பழங்களில் எதற்காக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கிறது என்று தெரியுமா?