புனே தீ விபத்து எதிரொலி: 1,441 இ-ஸ்கூட்டர்களை திரும்ப பெறுகிறது ஓலா

3 week_ago 11
ARTICLE AD BOX
<?php // } ?>

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதம் புனேயில் ஓலா நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இந்தச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள 1,441 ஓலா இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபமாக மின்சார இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தபடி உள்ளன. இதனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், தங்கள் நிறுவன வாகனங்களைத் திரும்பப் பெற்று பரிசோதித்து வருகின்றன.

இந்நிலையில், புனேயில் தங்கள் நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த நிகழ்வு தொடர்பாக விசாரித்து வருவதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த ஸ்கூட்டரோடு தயாரிக்கப்பட்ட 1,441 ஸ்கூட்டர்களையும் திரும்பப் பெறுவதாகவும் ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரும்பப் பெறப்படும் ஸ்கூட்டர்கள் முழுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் அவற்றின் பேட்டரி சிஸ்டம், தெர்மல் சிஸ்டம் தொடர்பாக கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஓலாவைப் போல் ஒகிநாவாஆட்டோடெக் 3,000 இ-ஸ்கூட்டர்களையும், ப்யூர் இவி நிறுவனம் 2,000 இ-ஸ்கூட்டர்களையும் திரும்பப் பெற்றுள்ளது.

- பிடிஐ

<?php // } ?>
read-entire-article