ARTICLE AD BOX

ஏன் நமக்கு
இத்தனை எதிரிகள்?
தந்தை பெரியாரின் இதழியல்
ஆய்வும் தொகுப்பும்: இரா.சுப்பிரமணி
விடியல் பதிப்பகம்
விலை: ரூ.1,000
இதழாளர் பெரியார்
ஒரு இதழாளராகப் பெரியாரின் பங்களிப்புகளைத் தொகுத்து அவரது இதழியல் அணுகுமுறை குறித்த மதிப்பீட்டு ஆய்வையும் வழங்கியிருக்கிறார் பேராசிரியர் இரா.சுப்பிரமணி. இதழியல் குறித்த பெரியாரின் பார்வைகள், அவர் தொடங்கிய இதழ்கள் குறித்து அவர் எழுதிய குறிப்புகள், அவர் போற்றிய 50-க்கும் மேற்பட்ட தோழமை இதழ்கள், மாற்றுக் கருத்துடைய இதழ்களோடு அவர் நடத்திய விவாதங்கள், எழுதிய நூல் மதிப்புரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய பெருந்தொகுப்பு இது.