'பீஸ்ட்' படக்குழுவினருக்கு விருந்து வைத்த விஜய்!

3 week_ago 13
ARTICLE AD BOX
<?php // } ?>

'பீஸ்ட்' படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து வைத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' கடந்த 13 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது. பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்தாக குற்றம்ச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில், நடிகர் விஜய் 'பீஸ்ட்' படக்குழுவை நேரில் அழைத்து விருந்து வைத்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குநர் நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''எங்களுக்கு விருந்து அளித்ததற்கு நன்றி விஜய் சார். மிகவும் ஜாலியான, மறக்க முடியாத மாலை வேளை எங்கள் அனைவருக்கும் இது அமைந்தது. விஜய் சார் அளித்த அன்புக்கும் ஆதரவுக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடன் பணிபுரிவது அழகான அனுபவம். இந்த அனுபவத்தை என் வாழ்வில் எப்போதும் நினைவில் கொள்வேன். உங்களுடைய வசீகரமும் புகழும் இந்தப் படத்தை சாத்தியமாக்கியுள்ளது.

இந்த வாய்ப்பை அளித்த சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன், காவ்யா மாறனுக்கு நன்றி. படக்குழுவினரின் உதவியின்றி இப்படத்தை உருவாக்கியிருக்க முடியாது. அவர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள். எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. விஜய் சார் மற்றும் படக்குழுவினருடன் துணை நின்று பீஸ்டைப் பெரிய வெற்றிப்படமாக உருவாக்கியுள்ளீர்கள் அனைவருக்கும் நன்றி'' என்று பதிவிட்டுள்ளார்.

<?php // } ?>

தவறவிடாதீர்!

read-entire-article