World

படகு கவிழ்ந்து 10 பேர் பலி


சான்சிபர் : இறுதிச்சடங்கில் பங்கேற்க சென்று கொண்டிருந்த போது, படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் மீட்கப்பட்டனர்.

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவின் ஆட்சியின் கீழ் உள்ள சான்சிபர் தீவின் கோனி மாவட்டம் கிஸிவபன்சா என்ற இடத்தில் வசிக்கும் 19 பேர், உறவினரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க படகில் சென்றனர். நடுவழியில் படகு கவிழ்ந்து 10 பேர் உயிரிழந்தனர். ஒன்பது பேர் மீட்கப்பட்டனர். பலத்த காற்றில் படகு கவிழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertisement

What's your reaction?

Related Posts

1 of 252