நூல் வெளி | நூல்நோக்கு: மொழி வழியே இசை

2 month_ago 19
ARTICLE AD BOX
<?php // } ?>

இசை குறித்த ரா.கிரிதரனின் ‘காற்றோவியம்’ நூல் ஷாஜியின் கவித்துவத்தையும் நா.மம்மதுவின் நுட்பத்தையும் ஒருங்கே பெற்றிருக்கும் கட்டுரைகளைக் கொண்டது. இசையை மொழியில் வர்ணிப்பது சவாலான விஷயம். கிரி அதில் வெற்றிபெற்றிருக்கிறார். பொதுவாக, இசை எழுப்பும் மன உணர்வுகளை நாம் படைப்பாக்கலாம். ஆனால், கட்டுரைக்குத் துல்லியத் தன்மை தேவை.

படைப்புக்குக் கற்பனையில் விழும் படிமமே போதுமானது. இசையைப் பற்றிய ரா.கிரிதரனின் ஆழ்ந்த அறிவு கட்டுரைகளில் வெளிப்படுகிறது. அவர் இயல்பிலேயே இலக்கியவாதியாக இருப்பதால், ஒரு புனைவை வாசிக்கும் மயக்கத்தை இக்கட்டுரைகள் தருகின்றன. மேற்கத்திய செவ்வியல் இசையின் அடிப்படைகளையும், அது உருவாகிய வரலாற்றுப் பின்புலங்களையும், அக்கலைஞர்களின் தத்தளிப்புகளையும் இந்நூலில் காணலாம்.

- சித்ரன், ‘கனாத்திறமுரைத்த காதைகள்’
சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

காற்றோவியம்
ரா.கிரிதரன்
அழிசி பதிப்பகம், கீழநத்தம்-627353
விலை: ரூ.250
தொடர்புக்கு: 7019426274

<?php // } ?>
read-entire-article