நாம் யார் என்பதை வெற்றியில் நிரூபிக்க வேண்டும்: வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா அறிவுறுத்தல்

3 month_ago 11
ARTICLE AD BOX

செய்திப்பிரிவு

Last Updated : 07 Feb, 2022 01:43 PM

Published : 07 Feb 2022 01:43 PM
Last Updated : 07 Feb 2022 01:43 PM

<?php // } ?>

நாம் யார் என்பதை நம் வெற்றியின் மூலமாக நிரூபிக்க வேண்டும் என மாணவர்களுக்கான ஊக்க நிகழ்ச்சியில் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா அறிவுறுத்தினார்.

காட்பாடியில் உள்ள சன்பீம் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான ஊக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் அறிமுக உரை நிகழ்த்தினார். காட்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

சன்பீம் தலைவர் ப.ஹரி கோபாலன் வரவேற்றார். பள்ளியின் துணைத்தலைவர் டாக்டர் ஜார்ஜ் அரவிந்த், வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயாவுக்கு நினைவுப் பரிசை வழங்கினார்.

நிகழ்ச்சியில், டிஐஜி ஆனி விஜயா பேசும்போது, ‘‘வெற்றியை எட்டிப்பிடிக்க தேவை தோல்வி, சவால் மற்றும் நிதானமே பிரதானம். வாழ்க்கையில் எதையும் கூர்ந்து கவனித்தல், தேவையில்லாத இடத்தில் பேசக்கூடாது, தேவைப் படும் இடத்தில் பேசுதல் மற்றும் சிந்தனையை தெளிவாக வைத்திருந்தால்தான் நாம் எடுக்கும் முயற்சியில் இலக்கை அடைய முடியும்.

ஒரு மனிதனுக்கு சரியான அணுகுமுறை, அறிவு, திறன் இவை மூன்றும் இருந்தால் மட்டுமே வாழ்வில் வெற்றி அடையலாம். நாம் யார் என்று மற்றவருக்குத் தெரிவிக்க, கவனமாக வும் சுயநலமாகவும் இருந்து யார் என்பதை நிரூபிக்க வேண்டும். நாம் யார் என்பதை வெற்றியின் மூலமாகவும், என்ன செய்கிறோம் என்பதை நம் நோக்கத்தின் மூலமாகவும் தெரிவிப்பதே நம்முடைய இலக்காக அமைய வேண்டும்.

ஒரு காவல் துறை அதிகாரி யாக இருந்தால் மட்டுமே சமு தாயத்துக்கு பணியாற்ற முடியும் என்றில்லாமல், யாராக இருந்தாலும் சமுதாயத்துக்கு நம்மால் முடிந்த உதவியை செய்யலாம். மாணவர்களாகிய நீங்கள் வாழ்வில் வெற்றியடைய நன்றாகப் படித்து இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.

பின்னர், மாணவர்களுடன் டிஐஜி ஆனி விஜயா கலந்துரை யாடல் நிகழ்வு நடைபெற்றது. முடிவில், ஆசிரியை லீனா நன்றி தெரிவித்தார்.

<?php // } ?>
read-entire-article