in

நாம் பயணம் செய்யும் ரயில்களின் கடைசி பெட்டியில் ஏன் X மார்க் இருக்கிறது என்பது யாருக்காவது தெரியுமா?

இந்த X மார்க்கை ரயிலில் கடைசி பெட்டியில் அடர் மஞ்சள் நிறத்தில் போட்டிருப்பர். அதன் அருகில் LV என எழுதி இருக்கும். அதன் அர்த்தம் Last Vehicle என்பதாகும். இதனை அடுத்து X மார்க்குக்கு கீழே சிகப்பு கலர் விளக்கு இருக்கும். இவை அனைத்தும் கடைசி பெட்டியில் இருப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அதாவது ரயில்வே நிலையத்தில் ரயிலின் கடைசி பெட்டியில் X மார்க் இல்லை என்றால் எமர்ஜென்சி என அர்த்தம்.

இந்த X மார்க் உள்ள கடைசி பெட்டி இல்லாமல் போனால் அதனுடன் சேர்ந்த சில பெட்டிகளும் ரயிலை விட்டு கழன்று தனியாக சென்றது என அர்த்தம். இதனாலேயே ஒவ்வொரு ரயில்நிலையம் வந்தவுடன் X மார்க் பெட்டி இருக்கிறதா என்பதை கவனிப்பார்கள். இரவு நேரங்களில் இந்த X மார்க் தெரியாது. எனவே அதற்கு கீழே இருக்கும் சிகப்பு விளக்கை வைத்து கடைசி பெட்டி இருக்கிறது என்பதை உறுதி செய்வர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Veteran

Written by Ganesh Ayyadurai

Video MakerImage MakerPoll MakerStory MakerContent Author

மனிதர்களை விட குதிரைகள் தான் அதிக பாவனைகளைக் காட்டுமாம். ஆய்வுத் தகவல்.

காசு..பணம்.. துட்டு.. மணி..மணி… ரூபாய் நோட்டுகள் எப்படி தயாரிக்கிறார்கள்?