ARTICLE AD BOX
Last Updated : 20 Apr, 2022 01:06 PM
Published : 20 Apr 2022 01:06 PM
Last Updated : 20 Apr 2022 01:06 PM

நஸ்ரியா - நானி நடிப்பில் உருவாகியுள்ள 'அடடே சுந்தரா' படத்தின் டீசர் இன்று வெளியானது.
கடந்த 2014-ம் ஆண்டு தமிழில் வெளியான 'திருமணம் எனும் நிக்காஹ்' படத்தில் நடித்து முடித்த கையோடு, ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்துகொண்ட நஸ்ரியா நடிப்புக்கு தற்காலிக முழுக்கு போட்டியிருந்தார். அவ்வப்போது மலையாள படங்களில் முகம் காட்டி வந்தவர், தற்போது விவேக் ஆத்ரேயா இயக்கும் 'அடடே சுந்தரா' படத்தில் நடித்திருக்கிறார். நானி நாயகனாக நடிக்கும் இந்தப் படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. கிட்டதட்ட 8 வருடங்களுக்குப் பிறகு தமிழில் நஸ்ரியாவைக் காண அவரது ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியானது.
2.10 நிமிடங்களை கொண்டுள்ள ’அடடே சுந்தரா’ டீசர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
’அடடே சுந்தரா’ ஜூன் 11 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவறவிடாதீர்!
- சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
- தமிழக நிலவரம் | மாநில சராசரியைவிட குறைவாக கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள 25 மாவட்டங்கள்
- தமிழகத்தில் புதிய கோளரங்கம் அமைத்தால் மதுரைக்கு முக்கியத்துவம்: அமைச்சர் பொன்முடி
- 100 நாட்களுக்குள் 2 லட்சம் சந்தாதாரர்களை இழந்த நெட்ஃப்ளிக்ஸ் | என்ன காரணம்?
Sign up to receive our newsletter in your inbox every day!