டுவிட்டரை வாங்க எலான் மஸ்க் முதற்கட்ட பேச்சு வார்த்தை

2 week_ago 12
ARTICLE AD BOX

நியூயார்க் : சமூக ஊடக நிறுவனமான 'டுவிட்டர்' நிறுவனத்தை வாங்க விரும்புவதாக, அண்மையில் உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில், நேற்று இரு தரப்புக்கும் இடையே முதற்கட்ட பேச்சு நடைபெற்றுள்ளது.

கடந்த 14ம் தேதியன்று எலான் மஸ்க், ஒரு பங்கு 54.20 டாலர் என்ற விலையில், அதாவது, கிட்டத்தட்ட 3.31 லட்சம் கோடி ரூபாய்க்கு டுவிட்டரை வாங்க தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார். ஆனால், அப்போது இதற்கான நிதிக்கு என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம், 'மார்கன் ஸ்டான்லி' உள்ளிட்ட, சில வங்கிகள் வாயிலாக, நிதியை பெற இருப்பதாக மஸ்க் தெரிவித்தார்.டுவிட்டர் நிறுவனம் பேச்சு நடத்துவதற்கு அழுத்தம் தருவதாக இது அமைந்தது.இதையடுத்து, இரு தரப்பும் முதல் கட்ட பேச்சில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.இந்த சந்திப்பின் போது, எவ்வளவு தொகை; வாங்குவதற்கான காலக்கெடு உள்ளிட்ட விஷயங்கள் அலசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

துவக்கத்தில் எலான் மஸ்க், கையகப்படுத்துவதை தடுக்கும் வகையில், 'பாய்ஸன் பில்' எனும் நடவடிக்கையை டுவிட்டர் நிர்வாகம் மேற்கொண்டது. அதன் பின், மஸ்க் வசம் போதுமான நிதி வசதி இருப்பதாக அறிந்ததும், தற்போது பேச்சு நடத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

read-entire-article