Politics

டி.ஆர்.பாலுவின் மாரத்தான் நிறைவு அமித் ஷா சந்திப்பு முயற்சி தோல்வி


தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு தடை வாங்குவது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க 10 நாட்கள் காத்திருந்தும், தமிழக எம்.பி.,க்கள் தங்கள் முயற்சியில் தோல்வி அடைந்து சென்னை திரும்பினர்.
தேர்தல் வாக்குறுதி
இதுகுறித்து, டில்லியில் நேற்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:தமிழகத்தில் ‘நீட்’ தேர்வுக்கு தடை என்பது தி.மு.க.,வின் மிக முக்கிய தேர்தல் வாக்குறுதி. கடந்த முறை பல காரணங்கள் கூறி சமாளித்த தி.மு.க.,வினர், வரும் கல்வி ஆண்டில் தங்கள் முயற்சிக்கு வெற்றி கிடைக்காவிடில் பெரும் சங்கடத்தை எதிர்நோக்குவர்.ஆனால், டில்லியில் களச்சூழல் வேறு மாதிரி இருக்கிறது.
இவ்விஷயத்தில் தமிழக கவர்னர் தரப்பு, தமிழக பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கருத்துகள், ஒரே வளையத்திற்குள் இருப்பதால், அதன் அடிப்படையில் காய்கள் நகர்த்தப்படுகின்றன.தேர்தலுக்கு முன், ‘நீட் தேர்விற்கு தடை பெற தங்களிடம் ஒரு ‘பார்முலா’ இருக்கிறது; அதை வெளிப்படையாக கூறமாட்டோம்’ என தி.மு.க., முன்னணி தலைவர்கள் பேசியதை டில்லி வட்டாரங்கள் மறக்கவில்லை.அந்த பார்முலா குறித்து தி.மு.க., – எம்.பி.,க்களிடம், பா.ஜ., தலைவர்கள் பலமுறை கிண்டலாக கேட்டுள்ளனர்.
அத்துடன் அனைத்துக்கட்சி குழுவுடன் சந்திக்க வருவதாக கூறிவிட்டு, பார்லி.,யில் உள்ள தமிழக கட்சிகளின் மூத்த எம்.பி.,க்கள் ஆறு பேரோடு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுஉள்ளனர். இது, அமைச்சர் அலுவலகத்தை குழப்பத்தில் ஆழ்த்தியது. அடுத்து, உள்துறை அமைச்சர் தங்களை சந்திக்க மறுப்பதாக டி.ஆர்.பாலு பேட்டி அளித்தது, உள்துறை அமைச்சகத்தை சூடாக்கியது.


எம்.பி.,க்கள் குழு

இந்நிலையில், ஜன., 3 அல்லது 4ம் தேதிகளில் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக கூறிய எம்.பி.,க்கள் குழு, மீண்டும் டில்லி வந்து, கடந்த திங்கள் காலை முதல் உள்துறை அமைச்சர் இல்லம் அருகே காத்துக் கிடந்தனர். கடைசியில் சந்திப்பு நிகழவேயில்லை. இதனால் உள்துறை அமைச்சரை சந்திக்கவே முடியாமல் தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் சென்னை திரும்பினர்.

மிகவும் கண்டிக்கத்தக்கது

தமிழக சட்டசபை தீர்மானத்தை கவர்னர் டில்லிக்கு அனுப்பாமல் இருப்பதன் மூலம், அரசியல் சட்டத்தை குழி தோண்டி புதைத்துள்ளார். இப்பிரச்னைக்கு முழு காரணம் கவர்னர். கடந்த 10 நாட்களாக நாங்கள் காத்திருந்தும், உள்துறை அமைச்சர் எங்களை அழைக்கவில்லை. கடிதம், போன் மூலம் முயன்றும் சந்திக்க இதுவரை ஒப்புதல் தரவில்லை. இது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கவர்னருக்கு, உள்துறை அமைச்சரும் உடந்தையாக இருப்பது வருத்தமளிக்கிறது. அரசியல் காரணங்களுக்காக எங்களை சந்திப்பதை அவர் தவிர்க்கிறாரோ என சந்தேகப்படுகிறோம். டி.ஆர்.பாலு, லோக் சபா எம்.பி., – தி.மு.க.,கனிமொழி சாதித்திருப்பார்உள்துறை அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு டி.ஆர்.பாலு போராடிக் கொண்டிருந்த அதேவேளையில், ‘இந்த விவகாரத்தை கனிமொழியிடம் ஒப்படைத்திருந்தால் சந்திப்புக்கான நேரத்தை பெற்றிருப்பார்; சந்திப்பும் நடந்திருக்கும்’ என கனிமொழியின் ஆதரவாளர்கள் பேசினர்.

What's your reaction?

Related Posts

1 of 252