ஜோர்டனுக்கு கடைசி ஓவரை வழங்கியது ஏன்? - சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா விளக்கம்

4 week_ago 12
ARTICLE AD BOX
<?php // } ?>

புனே: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி ஓவர்கிறிஸ் ஜோர்டனுக்கு வழங்கப்பட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார் சென்னைசூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி யின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா.

ஐபிஎல் டி 20 தொடரில் நேற்றுமுன்தினம் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 6 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை அணி 5-வது தோல்வியை பெற்றுள்ளது. 170 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கடைசி 3 ஓவர்களில் வெற்றிக்கு 48 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் கிறிஸ் ஜோர்டன் வீசிய 18-வது ஓவரில் 25 ரன்களை வாரி வழங்கினார். இதில் ரஷித் கான் 3 சிக்ஸர்கள் பறக்கவிட்டிருந்தார்.

அப்போதே சென்னை அணியின் வெற்றி கைநழுவியது. போதாதக்குறைக்கு கிறிஸ் ஜோர்டனுக்கு கடைசி ஓவரும் கொடுக்கப்பட்டது. இதற்காக ஜடேஜா சகஅணி வீரர்கள் 7 பேருடன் ஆலோசித்தார். ஆனால் கேப்டனின் நம்பிக்கையை ஜோர்டன் காப்பாற்றத் தவறினார். அவர் வீசிய கடைசி ஓவரில் 13 ரன் தேவையாக இருந்த நிலையில் ஒரு நோபாலை வீசி, குஜராத் அணியின் வெற்றியை எளிதாக்கினார். குஜராத் அணியின் வெற்றியில் டேவிட் மில்லர் 51 பந்துகளில் விளாசிய 94 ரன்களும், ரஷித் கான் 21 பந்துகளில் விளாசிய 40 ரன்களும் முக்கிய பங்கு வகித்தது.

போட்டி முடிவடைந்ததும் சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா கூறும்போது, “நாங்கள் அற்புதமாகவே தொடங்கினோம். பந்து வீச்சு குழுவாக முதல் 6 ஓவர்களை சிறப்பாக வீசினோம். ஆனால் பாராட்டுகள் டேவிட் மில்லரையே சேரும். அவர், சில நல்ல கிரிக்கெட் ஷாட்களை விளையாடினார். நாங்கள் பேட்டிங் செய்த போது ஆடுகளம் இறுக்கமாக இருந்தது. பந்துகளும் நின்று வந்தன. இதனால் 169 ரன்கள் சமமான ஸ்கோராகவே இருக்கும் என்று கருதினோம்.

கடைசி 5 ஓவர்களில் எங்களது திட்டங்களை நாங்கள் செயல்படுத்தவில்லை. கிறிஸ் ஜோர்டன் அனுபவம் வாய்ந்தவர், அதனால் அவரை கடைசி ஓவரை வீசச் செய்யலாம் என நினைத்தேன். அவரால் 4 முதல் 5 யார்க்கர்களை வீச முடியும். துரதிருஷ்டவசமாக அது நடக்கவில்லை. இதுதான் டி 20 கிரிக்கெட்டின் அழகு” என்றார்.

இன்றைய ஆட்டம்

லக்னோ - பெங்களூரு

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

<?php // } ?>
read-entire-article