செய்திகள் சில வரிகளில்...

2 week_ago 10
ARTICLE AD BOX

சிறுவன் மீது தாக்குதல்

குணா: மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள மதுசூதன்கர் நகரில், ஒரு சிறுவனின் கைகளை கட்டி வைத்து பலரும் சரமாரியாக தாக்கும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் சமீபத்தில் வெளியானது. போலீசார் விசாரணையில், கோதுமை திருடியதாக கூறி சிறுவன் தாக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக, போலீசார் நேற்று கூறினர்.சிறையில் பெண் எம்.பி., மும்பை: மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே வீடு முன் அனுமன் துதி பாடுவதாக அறிவித்த சுயேச்சை எம்.பி., நவ்நீத் ராணா, அவரது கணவரும், எம்.எல்.ஏ.,வுமான ரவி ராணா ஆகியோர் தேசத்துரோக வழக்கில் கைதாகினர். நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், எம்.பி., நவ்நீத் பைகுல்லா மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரவி ராணா நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நவ்நீத் தாக்கல் செய்த மனுவை, மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

'மாஜி' கவர்னர் மரண

புதுடில்லி: மூத்த காங்கிரஸ் தலைவரும், மஹாராஷ்டிரா, நாகாலாந்து மற்றும் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் கவர்னருமான சங்கர நாராயணன், 89, கேரளாவின் பாலக்காட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், முதுமை காரணமாக நேற்று முன்தினம் இரவு அவர் மரணம் மடைந்தார். அவரது மறைவிற்கு, காங்., தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.ரூ.7.5 கோடி நகை திருட்டுஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு சமீபத்தில் வந்த பார்சலை, சரக்கு போக்குவரத்து நிறுவன ஊழியர்கள் ஐந்து பேர் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றுஉள்ளனர். அதில், 7.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பதை அறிந்து, ஐந்து பேரும் மாயமாகினர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருவதாக, போலீசார் நேற்று கூறினர்.

Advertisement

read-entire-article