வாழ்க்கையில் சில விஷயங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் இது ஏன் இப்படி இருக்கிறது என்று என்றைக்காவது யோசித்து இருக்கோமா?
என்று கேட்டால் இல்லை என்று தான் கூற வேண்டும். பெரும்பாலும் நாம் ஹோட்டல் மற்றும் மால்களுக்கு சென்றால் அங்கு உள்ள பாத்ரூம் கதவுக்கு கீழாக ஒரு ஆள் நுழையும் அளவிற்கு ஓட்டை இருக்கும். என்றைக்காவது அந்த ஓட்டை ஏன் உள்ளது என்று யோசித்து உள்ளீர்களா? அது ஏனென்றால் ஹோட்டல் மற்றும் மால்களில் செல்லும் நபர்கள் பாத்ரூமில் மயக்கம் போட்டு விழுந்து விட்டால் அந்த ஓட்டை வழியாக தெளிவாக தெரியும்.
மேலும் அவரை ஈஸியாகவும் நம்மால் காப்பாற்ற முடியும் என்பதற்காகத் தான் இந்த ஓட்டையை வைத்துள்ளார்கள். இரண்டாவது நீங்கள் சிலிண்டர் வாங்கும் போது கீழே உள்ள கம்பியில் ஓட்டை உள்ளதா என்பதை பார்த்து வாங்க வேண்டும் .ஏனென்றால் கீழே உள்ள கம்பியில் ஓட்டை இல்லை என்றால் நீங்கள் வீட்டில் பயன்படுத்தும் போது துருப்பிடித்து சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியாவதற்கு வாய்ப்புள்ளது.
ஸ்னைப்பர் துப்பாக்கியை வைத்து ஒருவரை சுடும் பொழுது அந்தத் துப்பாக்கியில் இருந்து சத்தம் வருவதற்கு முன்பாகவே அவர் இறந்து விடுவாராம். ஏனெனில் ஸ்னைப்பர் துப்பாக்கியில் இருந்து வெளியாகும் குண்டுகள் சத்தத்தை விட அதிக அளவில் பயணிக்கும் என்று கூறுகிறார்கள்.
This post was created with our nice and easy submission form. Create your post!