சால்வைக்கு பதிலாக நுால்கள்: நாஜிம் எம்.எல்.ஏ.,

3 week_ago 13
ARTICLE AD BOX

காரைக்கால், : விழாக்களில் சால்வை அணிவிக்கும் பழக்கத்தை கைவிட்டு, நுால்களை வழங்க அரசு உத்தரவிட வேண்டும்' என கவர்னர் மற்றும் முதல்வருக்கு நாஜிம் எம்.எல்.ஏ., கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக, கவர்னர் மற்றும் முதல்வருக்கு காரைத் தமிழ்ப் பேரவை சார்பில் அவர் எழுதி உள்ள கடிதம்:புதுச்சேரி மாநிலத்தில் பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை விற்பனை செய்ய முடியாமல் கடனில் தவித்து வருகின்றனர். பல எழுத்தாளர்கள் எழுத நினைத்தாலும், தங்களுக்கும் இந்த நிலை வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர். தற்போது யாரை பார்த்தாலும் சால்வை அணிவிக்கும் பழக்கம் உள்ளது.அதுவும் ஒரே சால்வை பல இடங்களுக்கு சுற்றுகிறது. இதுவே கொரோனா காலத்தில் அந்த நோய் பரவுவதற்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.எனவே கவர்னர், முதல்வர் மற்றும் முக்கியஸ்தர்களை சந்திக்க வருவோர் சால்வை அணிவிக்கும் பழக்கத்தை முழுமையாக தடை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக புதுச்சேரி எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே கொடுக்க வேண்டும். அரசு விழாக்களில் இந்த நடைமுறையை அந்தந்த துறைகள் கடைபிடிக்க வேண்டும். இது தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இதனால் பல உள்ளூர் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் ஏற்பட்டு புதிய புத்தகங்கள் எழுத வாய்ப்பு உருவாகும். உலக புத்தக தினத்தையொட்டி, உடனடியாக இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Advertisement

read-entire-article