ARTICLE AD BOX
'சாணிக் காயிதம்' பழிவாங்கும் பெண்ணின் கதை
25 ஏப், 2022 - 10:51 IST
ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள படம் சாணிக் காயிதம். ராக்கி படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ், மற்றும் செல்வராகவன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மே 6ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறியதாவது: சாணிக்காயிதம் மனதை உலுக்கும் ஒரு அழுத்தமான படைப்பு. ஒருவரின் வாழ்க்கையை அழித்தவர்களை சிறையில் தள்ளுவதல்ல பழிவாங்கல், அழித்தவர்களை அழிப்பதே பழிவாங்கல் என்ற மனநிலை கொண்ட ஒரு பெண்ணின் கதை. அதிரடி காட்சிகளை விரும்பும் ரசிகர்களை இறுதிவரை கட்டிப்போடும். ஒரு பெண் பழிவாங்கும் கதையை வழக்கத்திற்கு மாறாக ரத்தமும் சதையுமாக மயிர்க்கூச்செறியும் வகையில் மாறுபட்ட வடிவங்களில் சொல்லியிருக்கிறேன். என்றார்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்