Politics

கொரோனா பரவல் அதிகரிப்பு: பெங்களூரில் சனி, ஞாயிறு ஊரடங்கு


பெங்களூரு : கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை, பெங்களூரு மாநகரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுதும் கொரோனா மூன்றாவது அலை பரவி வருகிறது. இதையடுத்து டில்லி, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்திலும் இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நேற்றிரவு அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது.அமைச்சர்கள் அசோக், சுதாகர், அஸ்வத் நாராயணா, தலைமை செயலர் ரவிகுமார், டி.ஜி.பி., பிரவின் சூட், பெங்களூரு மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா மற்றும் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் அசோக் கூறியதாவது:கொரோனா பரவலை கட்டுப்படுத்த கர்நாடகாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகள் இன்று இரவு 10:00 மணி முதல் 19ம் தேதி அதிகாலை 5:00 மணி வரை அமலில் இருக்கும்.

latest tamil news

பெங்களூரூ மாநகரில் வாரந்தோறும் வெள்ளி இரவு 10:00 மணி முதல் திங்கட்கிழமை காலை 5:00 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.பால், மருந்தகம், காய்கறிகள், மளிகை கடைகள் போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் இயங்கும். மற்ற நாட்களில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.மாநிலம் முழுதும் பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை தடை செய்யப்படுகிறது. மருத்துவ மற்றும் செவிலியர் கல்லுாரிகள் தவிர மற்ற கல்லுாரிகள் மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மாநிலம் முழுதும் அமல்படுத்தப்படும் விதிமுறைகள் குறித்து சுகாதார துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது:கேரளா, மஹாராஷ்டிரா உட்பட கர்நாடகாவின் அண்டை மாநிலங்களிலிருந்து வருவோர் கட்டாயமாக கொரோனா நெகடிவ் சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.தியேட்டர், ஓட்டல், பப், கிளப்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஆன்மிகம், சமூகம், அரசியல் நிகழ்ச்சிகள், போராட்டங்கள், பாதயாத்திரைகள் தடை செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

What's your reaction?

Related Posts

1 of 247