கொரோனா பரவல் அதிகரிப்பு: பிரதமர் மோடி நாளை ஆலோசனை

3 week_ago 14
ARTICLE AD BOX

புதுடில்லி : நாட்டில், கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்து வருவது தொடர்பாக, மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

சமீப நாட்களாக, சில மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உருமாற்றம் அடைந்த 'ஒமைக்ரான்' வைரஸ் மிக வேகமாக பரவும் என்பதால், புதிய பாதிப்பு எண்ணிக்கை உயர்வதாக தெரிகிறது.கடந்த 24 மணி நேரத்தில், நாடு முழுதும், 2,541 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்றைய நிலவரப்படி, வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 16 ஆயிரத்து 522 ஆக உயர்ந்து உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, நாளை பகல் 12:00 மணிக்கு, மாநில முதல்வர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக, ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.இதில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை குறித்து விளக்கம் அளிப்பார் என, தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைத் தவிர தடுப்பூசி அளவு, 'பூஸ்டர் டோஸ்' செலுத்திய விபரம் உள்ளிட்டவை குறித்தும் விவரிப்பார்.விளையாட்டுகளுக்கு தடைசில மாநிலங்களில், கொரோனா பரவல் அதிகரிப்பதால், ஜார்க்கண்ட் மாநில பள்ளிகளுக்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு உள்ளதாக, அதிகாரிகள் நேற்று கூறினர்.

இதன்படி, பள்ளிகளில் காலை பிரார்த்தனை கூட்டம், விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, தகுந்த கால இடைவெளியில் கொரோனா பரிசோதனைகளை தொடர வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

Advertisement

read-entire-article