World

கொண்டாடப்படும் கெவ்லே ஆடு: ஸ்வீடனின் கிறிஸ்துமஸ் பாரம்பரியமும், 'தீவைப்பு' சம்பவக் கலக்கமும்!


உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. கிறிஸ்துமஸைப் பொறுத்தவரை அது கிறிஸ்தவர்களின் பெருவிழாவாகும். கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நாட்டிற்கு நாடு வேறுபடும். அந்த வகையில் ஸ்வீடனில் கிறிஸ்துமஸ் புதிய அடையாளத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆம்… நீங்கள் கெவ்லே ஆட்டை பற்றி கேள்விப்பட்டிருகிறீர்களா?

கெவ்லே ஆடு… இது ஸ்வீடன் நாட்டின் கிறிஸ்துமஸ் சின்னமாகும். ஸ்வீடனின் கெவ்லே என்ற நகரில் ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸை முன்னிட்டு வைக்கோலினால் ஆடு ஒன்று வடிவமைக்கப்படும். இதுவே கெவ்லே ஆடு என்று அழைக்கப்படுகிறது. 1966-ஆம் ஆண்டு இந்த வைகோல் ஆடு கெவ்லே நகரத்தில் முதன்முதலாக நிறுவப்பட்டது. இந்த ராட்சத கெவ்லே ஆடு 42 அடி உயரமும் 3.6 டன் எடையும் கொண்டது. உலகின் மிகப் பெரிய வைக்கோல் ஆடு என்று கின்னஸ் புத்தகத்திலும் கெவ்லே ஆடு இடம்பெற்றது.

What's your reaction?

Related Posts

1 of 265