ARTICLE AD BOX
Last Updated : 15 Apr, 2022 11:19 AM
Published : 15 Apr 2022 11:19 AM
Last Updated : 15 Apr 2022 11:19 AM

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து கடுமையாக உயர்ந்து வரும் நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.
உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் பெருமளவில் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் தங்கள் முதலீடுகளை மாற்றி வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
எனினும் சில தினங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் விலை தற்போது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. தங்கம் விலை கிராம் 5 ஆயிரத்தையும், பவுன் 40 ஆயிரத்தையும் மீண்டும் கடந்தது. கடுமையாக உயர்ந்து வந்தநிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.5006-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.40048-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.43240-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை 20 பைசா குறைந்து ரூ.74.40-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.74,400 ஆக உள்ளது.
தவறவிடாதீர்!
- மெரினா கடற்கரை கழிவறைகளில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு: 15 நாட்களில் சீரமைக்க அறிவுறுத்தல்
- சாலை விபத்தில் சிக்கி சார் ஆட்சியர் உயிரிழப்பு: போலீஸார் விசாரணை
- கவுன்டி கிரிக்கெட்டில் ஒரே அணியில் விளையாடும் புஜாரா - ரிஸ்வான்: இந்தியா-பாகிஸ்தான் ரசிகர்களின் ரியாக்ஷன்
- டெல்லியில் கரோனா தொற்று அதிகரிப்பு; பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்?- வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியீடு