ARTICLE AD BOX
Last Updated : 15 Apr, 2022 04:56 PM
Published : 15 Apr 2022 04:56 PM
Last Updated : 15 Apr 2022 04:56 PM

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி தனது புதிய படத்தின் அறிவிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் டெல்லி ஃபைல்ஸ் என சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார் மற்றும் பல்லவி ஜோஷி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் 'தி காஷ்மீர் பைல்ஸ்'. இந்த படத்தை ஒருசாரார் கடுமையாக எதிர்த்தனர். அதே சமயம் மறுசாரார் வரவேற்பு தெரிவித்தனர். இந்நிலையில், அந்த படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி டெல்லி பைல்ஸ் படத்தை இயக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ''தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்த்த அனைத்து மக்களுக்கும் நன்றி. கடந்த 4 ஆண்டுகளாக நேர்மையுடன் கடுமையாக உழைத்து இந்த படத்தை உருவாக்கினோம்.
இனப்படுகொலை மற்றும் காஷ்மீரி இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது முக்கியம். புதிய படத்தை உருவாக்கும் நேரம் இது'' என்று பதிவிட்டுள்ள அவர் கூடவே, 'டெல்லி ஃபைல்ஸ்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தவறவிடாதீர்!
- ‘‘இது உங்களை உறைய வைக்கும்‘‘ - தகனம் வெப்சீரிஸ் குறித்து ராம்கோபால் வர்மா
- நடனம் முதல் தடபுடல் விருந்து வரை - திருமண பந்தத்தில் இணைந்த ரன்பீர் கபூர் - ஆலியா பட்
- முதல் பார்வை | கேஜிஎஃப் 2 - பக்கா மாஸ் உடன் தெறிக்கவிடும் விஷுவல் விருந்து; ஆனால்..?
- 'மாற்றம் ஒரே இரவில் நடக்கவில்லை' - சல்மான் கான் ஆதங்கத்துக்கு யஷ் விளக்கம்
Sign up to receive our newsletter in your inbox every day!