நாம் அனைவரும் அன்றாட தேவைகளுக்கு பணத்தை செலவழித்து வருகிறோம். இந்தப் பணம் எனப்படும் ரூபாய் நோட்டுகள் நாணயங்கள் எங்கே தயாரிக்கப் படுகின்றன.
இந்திய நாட்டின் ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் எங்கு அச்சிடப்படுகிறது .அதன் வரலாறு என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். இந்திய ரூபாய் மற்றும் நாணயங்கள் 1950 முதல் அச்சிடப்பட்டு வருகிறது. அதன் பிறகு ஆண்டு தோறும் புதிய நாணயங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நாணயங்கள் அனைத்தும் இந்தியாவின் கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் அமைந்துள்ள நான்கு காசோலைகளில் தயாரிக்கப்படுகின்றது.
ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது. பலருக்கும் இந்திய ரூபாய் நோட்டுகள் காகிதத்தில் அச்சிடப்பட்டு வருகிறது என்று நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையில்லை. ரூபாய் நோட்டுகள் பருத்தி மற்றும் நார் பொருளான லினென் ஆகிய இரண்டு கலந்த காகிதத்தில் தான் அச்சிடப்படுகிறது. ரூபாய் நோட்டில் காகிதத்திற்கு பதிலாக பருத்தியை தேர்வு செய்ததற்கு சில காரணங்கள் உள்ளது. அதாவது பருத்தியில் தயாரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் எளிதாக கிழியாது. மேலும் பருத்தி காகிதத்துடன் ஜெலட்டின் போன்ற பசையை தடவும் போது அது நீண்ட நாட்கள் அழியாமல் நிலைத்து நிற்கும் தன்மை கொண்டுள்ளது. இதனால்தான் ரூபாய் நோட்டுகள் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. இந்திய ரூபாய் நோட்டுகள் மட்டும் பருத்தியில் தயாரிக்கப்படவில்லை. வெளிநாட்டிலுள்ள கரன்சி நோட்டுகளும் பருத்தியில் தான் தயாரிக்கப் படுகின்றது.
This post was created with our nice and easy submission form. Create your post!