ARTICLE AD BOX
ஏ.ஆர்.ரகுமான் பாராட்டிய அறிமுக இசையமைப்பாளருக்கு விஜய் தேவரகொண்டா பட வாய்ப்பு
24 ஏப், 2022 - 18:27 IST
மகாநடி படத்தை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தை இயக்குனர் சிவா நிர்வனா என்பவர் இயக்குகிறார். தெலுங்கில் தற்போது தமன், தேவிஸ்ரீபிரசாத் என முன்னணி இளம் இசையமைப்பாளர்கள் கோலோச்சிக் கொண்டு இருக்கும் நிலையில் இந்த படத்திற்கோ மலையாள அறிமுக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் என்பவரை ஒப்பந்தம் செய்து ஆச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஹிருதயம் படத்திற்கு இசையமைத்தவர். இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்கிய இந்த படத்தில் தான் இசையமைப்பாளராக அறிமுகமாகிய இவர், இந்த படத்தில் இரண்டு சூப்பர்ஹிட் பாடல்களை கொடுத்ததுடன் பின்னணி இசையிலும் மிரட்டியிருந்தார்.
ஒரு நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இவரை சந்தித்தபோது உன்னுடைய பாடல் தான் பல இடங்களில் தற்போது ஒலித்து வருகிறது என்று மனமுவந்து பாராட்டியிருந்தார். ஹிருதயம் படத்தின் ஹிட் பாடல்களும் ஏ.ஆர் ரகுமானின் பாராட்டும் இவருக்கு எளிதாக விஜய்தேவரகொண்டா படம் மூலம் தெலுங்கில் நுழையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது என்றே சொல்லலாம்.
Advertisement
வரவிருக்கும் படங்கள் !
- மாயன்
- நடிகர் : வினோத் மோகன்
- நடிகை : பிந்து மாதவி
- இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
- தேவதாஸ்
- நடிகர் : உமாபதி
- நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
- இயக்குனர் :மகேஷ்.ரா
- தமிழரசன்
- நடிகர் : விஜய் ஆண்டனி
- நடிகை : ரம்யா நம்பீசன்
- இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
- எங் மங் சங்
- நடிகர் : பிரபுதேவா
- நடிகை : லட்சுமி மேனன்
- இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்