'ஏகே 61'-க்காக ஹைதராபாத் சென்ற அஜித் - வைரலாகும் ஏர் ஹோஸ்டஸ் செல்ஃபி

1 month_ago 14
ARTICLE AD BOX

செய்திப்பிரிவு

Last Updated : 09 Apr, 2022 08:40 PM

Published : 09 Apr 2022 08:40 PM
Last Updated : 09 Apr 2022 08:40 PM

<?php // } ?>

'ஏகே 61' படப்பிடிப்பிற்காக ஹைதாரபாத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமாரை விமானத்தில் சந்தித்த ஏர் ஹோஸ்டஸ், அவருடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

'வலிமை' படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் மீண்டும் இயக்குநர் ஹெச்.வினோத்துடன் கைகோத்துள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் 'ஏகே61' என அழைக்கப்படுகிறது. ஏப்ரல் 11 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், நடிகர் அஜித் குமார் விமானம் மூலம் ஹைதராபாத் சென்றடைந்தார். அங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பை குறுகிய காலத்திற்குள் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத் சென்ற நடிகர் அஜித்துடன் கன்னிகா பிரபாகர் என்ற ஏர் ஹோஸ்டஸும் விமானத்தில் பயணித்துள்ளார். விமானத்தில் அஜித்தைக் கண்டவர் வியந்து மகிழ்ந்திருக்கிறார். அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டவர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

அதில், ''என்ன ஒரு ஜெம் பெர்சனாலிட்டி, மிகவும் பணிவான நபராக இருந்தார். தமிழ் சினிமாவின் சிறந்த திறமையான அழகான நடிகர் அஜித் குமார். அவருடன் பறந்த அனுபவம் நன்றாக இருந்தது. மிகவும் பணிவாகவும், மென்மையான புன்னகையுடனும், கனிவான நடத்தையுடனும் காட்சியளித்தார்'' என்று பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

'வலிமை' படத்தில் க்ளீன் ஷேவ் லுக்கில் காணப்பட்ட அஜித் 'ஏகே 61' படத்தில் நீளமான தாடியுடன் நடித்துள்ளார். அண்மையில் அஜித் ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரள சென்ற புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

<?php // } ?>

தவறவிடாதீர்!

read-entire-article