Movies

எல்லோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்: ஒமைக்ரான் தொற்றுக்குள்ளான நடிகை ஷோபனா வேண்டுகோள்


சென்னை: நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவிவரும் கரோனா தொற்றால் நடிகர், நடிகைகள் உட்பட ஏராளமான திரைக் கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உருமாற்றம் அடைந்த புது வகை ஒமைக்ரான் வைரஸும் மிரட்டி வருகிறது. இந்நிலையில், பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான ஷோபனாவுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவில், “கரோனா வுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்ட போதும் ஒமைக்ரான்பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக் கிறது. முதல்நாளில் மூட்டுவலி, குளிர், தொண்டை கரகரப்பு அறிகுறிகளாக இருந்தன.

பின்னர், ஒவ்வொரு நாளும் அவை குறைந்து வருகின்றன. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் மகிழ்ச்சி அடை கிறேன். தொற்று வேகமாகப் பரவுவதை அது தடுக்கிறது என நம்புகிறேன். நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால், உடனடியாகச் செலுத்திக் கொள்ளுங்கள். அனைவரும் தடுப்பூசி செலுத் திக் கொள்ளுங்கள். இந்த ஒமைக் ரானுடன் வைரஸ் தொற்று முடிவுக்கு வர வேண்டும் எனப் பிரார்த்தனை செய்கிறேன்” என ஷோபனா தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் கமல், சத்தியராஜ், நடிகைகள் த்ரிஷா, ஸ்வாரா பாஸ்கர் மற்றும் சின்னத் திரை நடிகர் நடிகைகள் பலர் ஏற்கெனவே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப் பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

1 of 298